பொது செய்தி

இந்தியா

" கொரோனா தடுப்பூசி போட்டேன்;எனக்கே பாதிப்பில்லையே ! " - 120 வயது மூதாட்டி

Added : மே 22, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஜம்மு: காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி போட்ட 120 வயது மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியே கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.சில தரப்பினர் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என தவறான தகவலை பரப்பி வருவதால் சிலர் மத்தியில் அச்சம்


ஜம்மு: காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி போட்ட 120 வயது மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியே கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.latest tamil newsசில தரப்பினர் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் என தவறான தகவலை பரப்பி வருவதால் சிலர் மத்தியில் அச்சம் நிலவுகிறது .

இந்நிலையில் காஷ்மீர் உதம்பூர் மாவட்டம் டோலிதேவி 120 கடந்த 17 ம் தேதி கொரோனா தடுப்பூசியை தாமாக முன்வந்து போட்டு கொண்டார். இது இவர் வசிக்கும் கிராமத்தில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கேள்விப்பட்டு பலரும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகின்றனர். இந்த தகவல் அறிந்த வடக்கு மண்டல லெப்டினட் கமாண்டர் ஜெனரல் ஜோஷி, டோலி தேவி வீட்டுக்கு சென்று மூதாட்டியை வாழ்த்தினார். இது மிக பாராட்டுக்குறியது என்றும் அவர் தெரிவித்தார்.


latest tamil newsதடுப்பூசி போட்டு கொண்டது குறித்து டோலிதேவி நிருபர்களிடம் கூறுகையில் ஊசி போட்ட பின் எவ்வித தொந்தரவும் இல்லை. ஒரு காய்ச்சல் கூட வரவில்லை. நலமாகத்தான் உணர்கிறேன் என்றார் .

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
22-மே-202120:41:16 IST Report Abuse
Anbu வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மூர்க்கம் ஏற்பதில்லை ......... விஞ்ஞானத்துக்கும் அதற்கும் வெகுதூரம் ............
Rate this:
Cancel
22-மே-202119:53:18 IST Report Abuse
ஆப்பு ஆயுசு கெட்டி பாட்டி... நீடூழி வாழ்க...
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன் ஏற்கனவே வைரல் ஜுரத்திற்கான மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு போட்டுக்கொள்ளவும். எனது உறவினர் ஒருவர் ஒரு மிக அனுபவம் வாய்ந்த மருத்துவர் (மதுரை ) ஒருவரின் சரியான கவனிப்பு இல்லாததாலும் அவரின் தவறான வழிகாட்டுதலின் பெயரிலும் தடுப்பூசியை தவறான நேரத்தில் எடுத்துக்கொண்டு போன வாரம் உயிரிழந்தார் .. ஒன்றுக்கு இரண்டு மருத்வரிடம் ஆலோசனை கேட்டு பிறகு முடிவு செய்யவும் .. மற்றபடி தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் பொதுவாக ஏற்படாது.. இரண்டு ஊசி போட்டுக்கொண்டதால் அவருடன் இரண்டு நாள் இருந்தும் எனக்கு கரோனா பாதிப்பு இல்லை.. ஆனாலும் இரண்டு வாரங்கள் நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் மற்றவர்களின் நலன் கருதி.
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
22-மே-202120:37:34 IST Report Abuse
Anbuஉங்களுடைய அணுகுமுறை மிகச்சரியானது .............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X