வீட்டுக்குள் அமைக்கலாம் இயற்கை செயற்கை செங்குத்து தோட்டம்

Added : மே 22, 2021
Share
Advertisement
வீட்டு தோட்டங்களில் பல வகைகள் இருந்தாலும் இயற்கை மற்றும் செயற்கையான செங்குத்து தோட்டங்கள் அமைக்கும் முறையும் உள்ளது.செயற்கை செடி, கொடிகளுக்கு இயற்கை ஒளி தேவையில்லை. ஆனால்,அது வண்ணமயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதன் முக்கிய நோக்கம் அலங்காரம். வீட்டில் ஒரு செங்குத்து தோட்டம் உருவாக்க விரும்புவோர் இயற்கை, செயற்கை தாவரங்களுடன் செய்யலாமா என திட்டமிட வேண்டும்.
வீட்டுக்குள் அமைக்கலாம் இயற்கை செயற்கை செங்குத்து தோட்டம்

வீட்டு தோட்டங்களில் பல வகைகள் இருந்தாலும் இயற்கை மற்றும் செயற்கையான செங்குத்து தோட்டங்கள் அமைக்கும் முறையும் உள்ளது.

செயற்கை செடி, கொடிகளுக்கு இயற்கை ஒளி தேவையில்லை. ஆனால்,அது வண்ணமயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதன் முக்கிய நோக்கம் அலங்காரம். வீட்டில் ஒரு செங்குத்து தோட்டம் உருவாக்க விரும்புவோர் இயற்கை, செயற்கை தாவரங்களுடன் செய்யலாமா என திட்டமிட வேண்டும். செயற்கை செங்குத்து தோட்டத்தில் தாவரங்கள், பூக்கள் செயற்கை என்பதால் பராமரிப்பு தேவை இல்லை. நாம் இயற்கை தாவரங்களை வைத்தால் பொருத்தமான இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதனால் அவை நன்றாக வளர்ந்து ஒளிச் சேர்க்கை செய்ய முடியும். செயற்கை செங்குத்து தோட்டத்தில் அலங்கார விளக்குபொருத்தி செயற்கை ஒளி தரலாம்.

இயற்கை தோட்டம் தரும் நன்மைகள்

ஆனால், இப்படி அமைக்கும் செயற்கை செங்குத்து தோட்டம் சுற்றுப்புறங்களுக்கு எந்த விதமான நன்மையும் அளிக்காது. இது எந்த வகையான காற்று சுத்திகரிப்பு, ஆக்சிஜன் உற்பத்தி போன்றவற்றை உருவாக்காது. இது அலங்காரத்திற்காக மட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கை தோட்டம் ஆக்சிஜனை உருவாக்கி காற்றை சுத்திகரிக்கும். வீட்டிற்கு சுற்றுச்சூழல் நன்மை தரும். இயற்கை தோட்டத்தை குடும்பமாக பராமரிக்க வேண்டும். இயற்கையை குறித்து சிறியவர்களுக்கு கல்வியாக கற்றுத்தரும் செயலாக இருப்பதால் இது நன்மை தான்.

அவ்வப்போது இந்த இயற்கை தோட்டத்தில் உரங்கள் இட்டு, நீர்பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த தோட்டம் அமைக்கும் இடத்தில் அதிக விளக்குகள், நேரடி ஒளி உள்ள இடம் தேவை. இயற்கை தாவரங்களை வீட்டுக்குள் பராமரிக்க நேரம் இல்லாததால் பலர் இதை செய்வதில்லை. அதனால் தான் பலர் செயற்கை செங்குத்து தோட்டங்களை அமைப்பதை பலரும் விரும்புகின்றனர். இடம், நேரம், பணத்தை மிச்சப்படுத்தும். செயற்கை பொருட்கள் என்பதால் பூச்சிகள், பாக்டீரியாக்களை அவை குறைவாகவே ஈர்க்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X