அலோபதியை அவமதிக்கிறாரா ராம் தேவ் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மே 22, 2021 | Added : மே 22, 2021 | கருத்துகள் (74) | |
Advertisement
புதுடில்லி : கொரோனா சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன மருத்துவமான அலோபதி முற்றிலும் முட்டாள்தனமானது என யோகா குரு ராம்தேவ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.கொரோனாவால் இந்திய மக்கள் தவித்து வருகிறார்கள். பலர் தங்களது சொந்தங்களையும்,
Ramdev, Allopathy, Ayurvedic,

புதுடில்லி : கொரோனா சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன மருத்துவமான அலோபதி முற்றிலும் முட்டாள்தனமானது என யோகா குரு ராம்தேவ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.

கொரோனாவால் இந்திய மக்கள் தவித்து வருகிறார்கள். பலர் தங்களது சொந்தங்களையும், நண்பர்களையும், அக்கம் பக்கத்தினரையும் இழந்து தவித்து வருகிறார்கள். இந்த நோய் எப்படியாவது நம் நாட்டை விட்டு போய் விடாதா என்று தினமும் கடவுளை வேண்டி வருகிறார்கள். கொரோனா கொடிய நோய் எதிர்த்து தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவர்களும், செவிலியர்களும் அந்த துறையை சார்ந்த பலரும் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். இந்த நோய்க்கு எதிராக நம்பிக்கை தரும் விதமாக தடுப்பூசியும், சில மருந்துகளும் கை கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் யோகா குரு ராம்தேவ், நவீன மருத்துவத்துவத்தையும், மருத்துவர்களையும் அவமதிக்கும் விதமாக பேசி உள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் ராம் தேவ் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், ‛‛நவீன மருத்துவமான அலோபதி முற்றிலும் முட்டாள்தனமானது. ரெம்டெசிவிர், பிளாஸ்மா தெரபி, ஐவர்மெக்டின் உள்ளிட்ட இன்னும் பல மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துவதில் இருந்து தவறிவிட்டது. அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்'' என பேசி உள்ளார்.


latest tamil news
ராம்தேவ்வின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீ்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூகவலைதளமான டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில், #Ramdev, #Allopathy, #Ayurvedic உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. மேலும் இந்திய மருத்து கழகமும், ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரதுறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

‛‛மக்களை தவறாக வழிநடத்தும் இவர் போன்ற ஆட்களை எல்லாம் உடனடியாக சிறையில் தள்ள வேண்டும்''.

அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களே. அலோபதி நகைப்புக்குரியது என ராம்தேவ் போன்று நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்களா. நீங்கள் ஒரு மருத்துவர், நாட்டின் சுகாதார துறை அமைச்சர். பதஞ்சலி தயாரிப்புகளை ஊக்குவிப்பதால் உங்கள் கருத்தை அறிய ஆவலோடு உள்ளோம்''.

‛‛இவரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுர்வேதிக்கு மருந்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் இந்த பொய்யான மனிதன் பேசுவை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்''.

‛‛நவீன மருத்துவத்தை குறை கூறும் ராம் தேவ்வும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தான் முட்டாள்கள்.

‛‛ராம்தேவ்விற்கு உடல்நலம் சரியில்லாமல் போன பல சமயங்களில் அவர் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து தான் சிகிச்சை பெற்று குணமாகி திரும்பினார்''.

‛‛கொரோனாவுக்கு எதிரான போரில் 1200 டாக்டர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான பேர் இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள். அவர்களை அவமதிப்பதை ஏற்க முடியாது''.

‛‛மக்கள் மீது தவறான கருத்துக்களை பரப்பும் ராம் தேவ் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளீர்கள். உடனடியாக அவரை கைது செய்து, சிறையில் அடையுங்கள்''. இப்படி பலரும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vetri -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202115:53:53 IST Report Abuse
vetri அவர் சொல்வது முற்றிலும் சரியானது
Rate this:
Cancel
23-மே-202115:34:09 IST Report Abuse
ravi chandran அலோபதி மருத்துவம் லைசென்ஸ் உரிமம் மற்றும் சான்றிதழ் பெற்றத் மருத்துவர்கள் எமனின் ஏஜெண்ட்கள். ஒரு மாத்திரை கூட பக்கவிளைவுகள் இல்லாமல் இல்லை.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-மே-202112:24:32 IST Report Abuse
Sivagiri இவரது ஆயுர்வேதிக் பேஸ்ட் / சோப்பு / டிஷ் வாஷ் சோப்பு / கிளீனிங் பவுடர் / பினாயில் - இவற்றை காப்பி அடித்து இப்போ மற்ற பன்னாட்டு கம்பெனிகள் - வேதம் , வேதசக்தி , ஆயுஷ் - என்கின்றன - சோப்பில் பேஸ்ட்டில் எலுமிச்சை இருக்கு என்கின்றன - துளசி இருக்கு என்கின்றன - வேப்பிலை இருக்கு என்கின்றன - ஏன் அடுப்பு கரி இருக்கு என்று ஒரு பேஸ்ட் சொல்லுது - கொசுபத்தி கூட வேதம் ஓதுகிறது - இதெல்லாம் நாம் பயன்படுத்தி கொண்டிருந்தவை - இந்த பன்னாட்டு பன்னாடைகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக கிண்டல் விளம்பரம் செய்தன . . இப்போ வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் - இதெல்லாம் நமது வேதம் - நாங்கள்தான் கண்டுபிடித்தோம் சூப்பரோ சூப்பர் என்று விளம்பரம் செய்கின்றன - விளங்காத பயல்கள் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X