சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல்

Updated : மே 22, 2021 | Added : மே 22, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
விக்டோரியா: இந்தியப் பெருங்கடலில் மொரீஷியசுக்கு அருகிலுள்ள சீஷெல்ஸ் தீவில் 61 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போது மீண்டும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.சீஷெல்ஸ் தமிழ் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு தீவு நாடு. தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம்.

விக்டோரியா: இந்தியப் பெருங்கடலில் மொரீஷியசுக்கு அருகிலுள்ள சீஷெல்ஸ் தீவில் 61 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. தற்போது மீண்டும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil newsசீஷெல்ஸ் தமிழ் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு தீவு நாடு. தீவின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். கொரோனா சேதம் இங்கேயும் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் தொகையில் 61.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஒரு மாதத்திற்கு முன்பே நீக்கப்பட்டன. நாட்டின் வருமானத்தில் 72 சதவீதம் சுற்றுலாவைப் பொறுத்தது என்பதால் இந்த முடிவை அரசு எடுத்தது.latest tamil newsசுற்றுலாவுக்கு அனுமதியளிக்கும் முன், அந்த நாட்டில் 3,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20ம் தேதி நிலவரப்படி, பாதிப்பு, 9,184 ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,700 சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்; இறப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம், 'புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 33 சதவீதம் பேர் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி போடவர்கள். தடுப்பூசி போட்டும் தொற்றுக்குள்ளான யாரும் இறக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது.


latest tamil newsஅந்நாட்டின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் நாதிர் ஹசன் தெரிவித்துள்ளதாவது:கொரோனாவால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் முதல் காலாண்டில் நிதி நிலை 92 சதவீதம் சரிந்தது. நாட்டின் கடன் பல மடங்கு உயர்ந்தது. நாட்டின் 72 சதவீத வருவாய் சுற்றுலாவை நம்பியுள்ளது. நாட்டிலுள்ள 61 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் சுற்றுலாவை மீண்டும் திறந்துள்ளோம். பல விமான நிறுவனங்கள் மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கடந்த வாரம் பள்ளிகளை மூடுவது, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது உள்ளிட்ட தடைகளை மீண்டும் விதித்துள்ளோம். மீண்டும் சுற்றுலாவுக்கு தடை விதித்தால், நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். பொருளாதார நெருக்கடியை அரசால் சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-மே-202120:02:36 IST Report Abuse
Natarajan Ramanathan 98,000 ஜனங்களில் எத்தனைபேர் கருணா வாரிசுகளோ...தெரியவில்லை.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-மே-202116:45:49 IST Report Abuse
வெகுளி அம்புட்டு தூரத்துல இருக்கே.... அஞ்சு வருசத்துக்குள்ள சீஷெல்ஸ்ச எப்படி அபகரிக்கலாம்?.... முதலில் குருமா ஆளுங்கள அனுப்பி ஒரு கூடாரத்த போடுவோம்....
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
22-மே-202118:31:57 IST Report Abuse
Ellammanஎப்பேர்ப்பட்ட அறிவாளி எந்த கருத்து போட்டாலும் இந்த அதிமேதாவித்தனமான கருத்து இனி நினைவில் வந்து இந்த உருப்படி குறித்த எண்ணம் எவ்வளவு கீழே செல்லும் தெரியுமா??...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
22-மே-202119:01:46 IST Report Abuse
Balajiஏற்கனவே அது வழியாதான் அப்பு அம்புட்டு கள்ளப்பணமும் கைமாறுது.. வெள்ளையாவுது.. வெள்ளந்தியா இருக்கீரே......
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-மே-202119:24:16 IST Report Abuse
Malick Rajaநாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது தன்னிலையில் மாறாது .....
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
23-மே-202108:43:40 IST Report Abuse
Ellammanமொரிஷியஸ் / கேமன் தீவு க்கும் ஷேஷல்ஸ் க்கும் வித்தியாசம் தெரியாத அப்புராணி பாலாஜி அவர்களே இந்தியாவிற்கு அந்த தீவில் இருந்து வந்த FDI மிக மிக மிக சொற்பமானது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X