தமிழகத்தில் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Updated : மே 22, 2021 | Added : மே 22, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.தமிழகத்தில் இன்று (மே22) நாளை (மே23) முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனையடுத்து வெளியூர் பயணிகள் நலன் கருதி இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.இந்நிலையில், இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும்
தமிழகம், சிறப்பு பஸ்கள், இயக்கம், தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று (மே22) நாளை (மே23) முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனையடுத்து வெளியூர் பயணிகள் நலன் கருதி இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.


latest tamil news



இந்நிலையில், இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 1,500 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 3,000 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் எனவும், இரண்டு நாட்களும் இரவு நேரங்களிலும் முழுமையாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதியும், தமிழக அரசின் உத்தரவை ஏற்றும் இன்று மற்றும் நாளை (மே 22,23) தமிழகத்துக்குள் ஆம்னி பஸ்கள் இயங்கும் என தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-மே-202112:09:31 IST Report Abuse
Malick Raja இந்த தளர்வு சரியானதுதானா ? என்பது கேள்விக்குறியாகி விட்டது .. இருப்பினும் நல்லது நடக்கவே விளைவோம் .. அதிகாரிகள் பலருக்கும் உண்மை நிலை தெரியாமல் ஏட்டுச்சுரைக்காய் நிலையில் இருப்பது வருந்துவதற்குரிய ஒன்று
Rate this:
Cancel
Chandran -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202110:55:50 IST Report Abuse
Chandran கிராமத்திலும் கொரணா பரவி விட்டது. நகரத்திலிருந்து பத்து கிராமம் தள்ளி உள்ள எங்கள் ஊரில் கொரணாவில் இருவர் சாவு. வரும் வழியில் கிராமங்களிலும் கொரணா பரவல் உள்ளது. மக்களே எச்சரிக்கையாக இருங்க ப்ளீஸ்
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
23-மே-202110:51:42 IST Report Abuse
Raja திங்கள் கிழமை கொரானா பாதிக்கப்பட்டவர்களும் இறப்பும் இருமடங்காகும். இதை இன்னும் ஒரு வாரம் எக்ஸ்டண்ட் பண்ணினால் தமிழக ஜனத்தொகை குறையும். நோய் பரவலை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X