பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனைக்கு காத்திருக்கும் வீடுகள் விபரங்களை வெளியிட்டது வாரியம்

Added : மே 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், 39 திட்ட பகுதிகளில் விற்பனைக்கு காத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கையை, வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ளது.சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டங்களில் உள்ள வீடுகளை விற்பது தொடர்பாக, அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும்.வாரிய திட்டத்தில், வீடு வாங்க

சென்னை:தமிழகத்தில், 39 திட்ட பகுதிகளில் விற்பனைக்கு காத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கையை, வீட்டுவசதி வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டங்களில் உள்ள வீடுகளை விற்பது தொடர்பாக, அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும்.வாரிய திட்டத்தில், வீடு வாங்க நினைப்போருக்கு, விற்பனைக்கு உள்ள வீடுகளின் விபரங்கள் சரியாக கிடைப்பதில்லை.

உதாரணமாக, சென்னையின் பிரதான பகுதிகளில் உள்ள திட்டங்களில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் உள்ளன. ஆனால், வாரிய கோட்ட அலுவலகத்தில் கேட்டால், வீடுகள் விற்பனை முடிந்துவிட்டதாக பதில் வருகிறது.இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் தனியார் திட்டங்களுக்கு செல்கின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாரிய அதிகாரிகள் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

வாரியத்தின், www.tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில், திட்ட வாரியாக, விற்பனைக்கு காத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, வாரியத்தின் திட்டங்கள் குறித்த விபரங்களுடன், விற்பனைக்கு உள்ள வீடுகள் விபரங்களையும் மக்கள் அறிய முடியும்.

வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வாரிய திட்டங்களின் உண்மை நிலவரத்தை வெளிப்படையாக தெரிவிக்க, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதை பார்த்து, மக்கள் தங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-மே-202110:29:40 IST Report Abuse
Girija இவர்கள் தமிழ் மொழியில் விளையாடுவதில் ஜித்தர்கள். உங்கள் செய்தியை பார்த்து அந்த வலைத்தளத்தை அலசினேன் . கட்டப்படும் வீடு, கட்டி முடிக்கப்பட்ட வீடு வித்தியாசம் இல்லை, தளம் வாரியாக காலி வீடு போன்ற விவரங்கள் கூட இல்லை. இதில் நாம் தேடுதல் மூலம் தேட வேண்டுமாம்? இந்த மென்பொறியாளர்கள் எங்கு படித்தனர் என்று தெரியவில்லை? எல்லாம் கொரோனா ஆல் பாஸ் போலிருக்கு . ஒரு பி டி எப் பைலில் ஒவ்வொரு ப்ராஜெக்ட் பற்றி பதிவேற்றம் செய்வதை விட்டு, ஒருவருக்கும் உதவாத பிலிம் காட்டுகின்றனர் வலைத்தளத்தில் . குப்பை .
Rate this:
Cancel
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
23-மே-202107:59:51 IST Report Abuse
Selvam Palanisamy வாரியத்தின், www.tnhb.tn.gov.in என்ற இணையதளம் ஓப்பன் ஆகவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X