பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் சத்துணவு ஊழியர் கோரிக்கை

Added : மே 22, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் சத்துணவு ஊழியர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தராம்பாள், செயலர் நுார்ஜஹான் ஆகியோர், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட போது, சத்துணவு ஊழியர்களை, கொரோனா நோயாளிகள் கணக்கெடுப்பு

சென்னை:தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் சத்துணவு ஊழியர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தராம்பாள், செயலர் நுார்ஜஹான் ஆகியோர், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட போது, சத்துணவு ஊழியர்களை, கொரோனா நோயாளிகள் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, அரசு பயன்படுத்தியது. அத்துடன், பஸ் போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும், கட்டாயப்படுத்தி, ஊழியர்கள் வாயிலாக, கொரோனா நோயாளிகளுக்கான உணவு தயாரித்து வழங்கியது.

அப்போது, திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு ஊழியர்கள், தங்களின் சொந்த பணத்தை செலவழித்து, உணவு தயாரித்து வழங்கினர். அந்த தொகை, இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது, திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலுார், புதுக்கோட்டை, திருவாரூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் வழங்காமல், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த நோய் தொற்று காலத்தில், தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றும், சத்துணவு ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை, அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X