சங்கீதமே தெய்வம்: கர்நாடக இசை பாடகி என்.ஜெ.நந்தினி

Updated : மே 23, 2021 | Added : மே 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'' சிரித்தாள் கன்னக்குழி அழகி, கர்நாடக இசையின் கலைவாணி, சங்கீத ஆர்வலர்களை சங்கீத இசை வரிகளால் அரங்கிற்குள் கட்டிப்போடும் கேரளத்து பைங்கிளி,'' என வர்ணிக்கும் கர்நாடக சங்கீத இசை பாடகி என்.ஜெ.நந்தினி 30, சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.பாரம்பரியமாக கர்நாடக சங்கீத தொடர்புடன் உள்ள குடும்பத்தில் தான் நானும் பிறந்தேன். சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம்.
 சங்கீதமே தெய்வம்: கர்நாடக இசை பாடகி என்.ஜெ.நந்தினி

'' சிரித்தாள் கன்னக்குழி அழகி, கர்நாடக இசையின் கலைவாணி, சங்கீத ஆர்வலர்களை சங்கீத இசை வரிகளால் அரங்கிற்குள் கட்டிப்போடும் கேரளத்து பைங்கிளி,'' என வர்ணிக்கும் கர்நாடக சங்கீத இசை பாடகி என்.ஜெ.நந்தினி 30, சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்.

பாரம்பரியமாக கர்நாடக சங்கீத தொடர்புடன் உள்ள குடும்பத்தில் தான் நானும் பிறந்தேன். சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். சங்கீதத்தில் முனைவர் பட்டம் பெற உள்ளேன். என் தாத்தா கர்நாடக இசை வித்வான் ஹரிஹர சுப்பிரமணி அய்யர். எனது 3 வயதிலேயே ராகத்தை கண்டறியும் திறனை பெற்றேன். எனது 12 வயதில் கச்சேரியில் பாட தொடங்கினேன்.

என் குருக்களான பாறசாலா பொன்னம்மாள், குமார கேரள வர்மா, பாக்கியலட்சுமி, மூர்த்தி ஆகியோரிடம் கர்நாடக இசை பயிற்சி பெற்றேன். 1000 கச்சேரிகளில் பாடியுள்ளேன். பல்வேறு சங்கீத கச்சேரிகள் மூலம் 28 விருதுகள் பெற்றுள்ளேன். சமீபத்தில் குருவாயூரப்பன் நாதோபாஷனா விருது பெற்றுள்ளேன். டி.வி., ரியாலிட்டி ேஷாக்களில் பங்கேற்று 'டைட்டில் வின்னர்' ஆனேன். பெரிய வித்வான்கள் நடுநிலையாளர்களாக இருந்து எனக்கு பல விருதுகளை வழங்கியுள்ளனர். 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சி மூலம் எம்.எஸ்.,விஸ்வநாதனிடம் விருதுடன், ஆசியும் பெற்றுள்ளேன். நம்மை யாராவது காப்பாற்றுவார்கள் என்பதை விட, உழைப்பை முழுமையாக நம்புகிறவள் நான். இன்றைக்கு கடுமையாக உழைத்தால், நாளைக்கு நிச்சயம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

சங்கீதத்தை எவ்வளவு தெய்வமாக நம்புகிறோம் என்பது தான் முக்கியம். அடுத்த தலைமுறைக்கும் கர்நாடக சங்கீதத்தை எடுத்து செல்கிறேன். ''சங்கீதம் என்றால் ஒழுக்கம்''. இந்த ஒழுக்கத்தை கற்க, வாழ்க்கையிலும் ஒழுக்கம் அவசியம். மனித வாழ்வை ஒழுக்கத்தோடு அழைத்து செல்வது தான் சங்கீதம். இசையை வளர்ப்பதற்காக பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன் என்றார்.இவரை பாராட்ட... nandininjn@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
18-ஜூன்-202112:11:51 IST Report Abuse
Mayuram Swaminathan என் ஜெ நந்தினி கர்நாடக இசையில் சிகரங்கள் தொட வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X