ஓ-2 திட்டத்துக்கு ஆக்சிஜன் உபகரணங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஓ-2' திட்டத்துக்கு ஆக்சிஜன் உபகரணங்கள்

Updated : மே 23, 2021 | Added : மே 23, 2021
Share
சென்னை-'ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் தி.நகர்' இணைந்து 'ஓ-2' திட்டத்தின் வாயிலாக அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உபகரணங்களை வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் உதவலாம்.இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:இந்த அசாதாரணமான சூழலில், லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதனால், ஆக்சிஜன் மற்றும் அதன்
 'ஓ-2' திட்டத்துக்கு ஆக்சிஜன் உபகரணங்கள்

சென்னை-'ராஜன் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் தி.நகர்' இணைந்து 'ஓ-2' திட்டத்தின் வாயிலாக அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உபகரணங்களை வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் உதவலாம்.இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:இந்த அசாதாரணமான சூழலில், லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். இதனால், ஆக்சிஜன் மற்றும் அதன் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 'ராஜன் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர்' இணைந்து 'ஓ-2' திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இத்திட்டத்தின் வாயிலாக சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு 300 ஆக்சிஜன் உருளைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், அதே மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான திட்டம் 90 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.மேலும், ஸ்டான்லி, ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்கப்பட உள்ளது.

கடந்த வாரம் 100 ஆக்சிஜன் உபகரணங்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் உதவ முன்வரலாம். அவ்வாறு உதவுபவர்கள், காசோலை, டி.டி., வாயிலாகவும், நேரடியாக வங்கி கணக்கிற்கும் பணம் செலுத்தலாம்.அதன் விபரம்:Cheque/DD in favour of: “Rotary Club of Madras T.Nagar Charitable Trust” For online NEFT: Bank: Canara Bank, Branch: Mowbrays RoadA/C: 1281101034735, IFSC: CNRBOOO1281PROJECT O2இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X