பொது செய்தி

இந்தியா

கொரோனா இறப்பு எண்ணிக்கைதணிக்கை செய்ய அரசு உத்தரவு

Added : மே 23, 2021
Share
Advertisement
பெங்களூரு-கிராமங்களில் தினசரி ஏற்படும் கொரோனா இறப்பு எண்ணிக்கையை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.நாள்தோறும் கிராமங்களில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கையை தணிக்கை செய்து அறிக்கை அனுப்புமாறு, கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா இறப்பு எண்ணிக்கை மாநில தணிக்கை குழு வழிநடத்துனர் டாக்டர் சச்சிதானந்த் கூறுகையில்,''தொற்று பாதிக்கப்பட்டோர்,

பெங்களூரு-கிராமங்களில் தினசரி ஏற்படும் கொரோனா இறப்பு எண்ணிக்கையை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.நாள்தோறும் கிராமங்களில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கையை தணிக்கை செய்து அறிக்கை அனுப்புமாறு, கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா இறப்பு எண்ணிக்கை மாநில தணிக்கை குழு வழிநடத்துனர் டாக்டர் சச்சிதானந்த் கூறுகையில்,''தொற்று பாதிக்கப்பட்டோர், மருத்துவமனைக்கு தாமதமாக செல்வது தான் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.''அறிகுறிகள் தெரிந்தவுடன் பலரும் தனிமைப்படுத்தி கொள்ளாமலும், பரிசோதனை செய்து கொள்ளாமலும் உள்ளனர். தினசரி இறப்பு எண்ணிக்கையை தணிக்கை செய்வதால் எதனால் நிகழ்கிறது என்பதை அறிய முடியும்.''பாதிக்கப்பட்டோர் இறப்புக்கு படுக்கை வசதிகள் கிடைக்காதது காரணமாக இருந்தால், மாநில அரசின் சார்பில், அந்தந்த பகுதிகளில் தேவைப்படும் படுக்கை வசதிகள், சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X