தூத்துக்குடி : தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, தன் எம்.பி., தொகுதியான துாத்துக்குடியில் முகாமிட்டு, கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, ஆக்சிஜன் கிடைப்பதற்கும், உயிர் காக்கும் மருந்துகளும் தங்குதடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், துாத்துக்குடி மக்களின் உயிர்காக்கும் தேவைக்கு வழங்கும் வகையில், 500 ஆவி பிடிக்கும் மிஷின், 300 ஆக்ஸி மீட்டர், சானிடைசர், 25 ஆயிரம் மாஸ்க், மருத்துவ உபகரணங்கள், 500 பை அரிசி உள்ளிட்ட பொருட்களை கனிமொழியிடம் தொழிலதிபர் பெப்சி முரளி வழங்கினார்.
இந்த பொருட்களை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அனுப்பி வைக்க கட்சி நிர்வாகிகளிடம் கனிமொழி ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE