சென்னை: இல்லத்தை ஆளும் மங்கையரிடம் மறைந்திருக்கும் திறமைகள் ஏராளம். அவற்றை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியாக தனித்திறன் போட்டிகளை தொடர்ந்து நடந்த இருக்கிறது தினமலர் நாளிதழ்.
அந்த வகையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட போட்டியின் தொடர்ச்சியாக, இன்றும் தனித்திறன் போட்டிகள் நடக்கின்றன. வரும் வாரங்களிலும் மகளிர் திறமை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்றைய போட்டியில் மகுடம் சூட விருப்பமுள்ள மங்கையர், கீழ்கண்ட திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினால் போதும். இப்பவே தயாராகுங்க, மகுடம் உங்களுக்குத்தான்ணா
சிங்கார சிகையலங்காரம்
விதம் விதமான 'ஹேர்ஸ்டைல்' செய்து, அசத்தும் திறமை கொண்டவர் நீங்கள் எனில், அதை செய்து காட்டுங்களேன்! நீங்கள் செய்ததை அப்படியே ஒர நிமிட வீடியோவாக எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்தால், பரிசு நிச்சயம் உங்களுக்குத்தான்.
மெஹந்தியில் கலைவண்ணம்
காண்பவரை அசத்தும் வகையில் பல டிசைன்களில் மெஹந்தி இடும் திறமை கொண்டவரா நீங்கள்? அதை ஒரு நிமிட வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பி பரிசை வெல்லுங்க!



பாட்டுப்பாடவா
ஏதேனும் ஒரு பாடலை உங்கள் குரலில் பாடி, அதை வீடியோவாக எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
போட்டியில் பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 50 பேருக்கு ஆச்சர்ய பரிசு உண்டு.
பங்கேற்பாளர்கள், டெலிகிராம் செயலியில், வீடியோவை அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் பெயர், முகவரி, தொடர்பு எண் அனுப்ப வேண்டியது முக்கியம்.
போட்டி நாள்: இன்று - 23.5.2021
நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை
டெலிகிராம் எண்: 93602 75216