சூரஜ்பூர்:சத்தீஸ்கரில் ஊரடங்கில் மருந்து வாங்க வந்த வாலிபரை தாக்கிய கலெக்டர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இங்குள்ள சூரஜ்பூர் மாவட்டத்தில் மருந்து வாங்க வந்த வாலிபரை, கலெக்டர் ரன்பீர் ஷர்மா கன்னத்தில் அறையும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சர்ச்சையை ஏற்படுத்தின.
இது தொடர்பான, 'வீடியோ'வில், மருந்துகள் வாங்க வந்த வாலிபரிடம், விதிகளை மீறி வெளியே சுற்றுவது குறித்து கலெக்டர் கேள்வி எழுப்புகிறார். வாலிபர், ஒரு சீட்டை அவரிடம் கொடுத்து, மருந்துகள் வாங்க வந்ததாக கூறுகிறார்.
அதை ஏற்காத கலெக்டர், வாலிபரின் மொபைல் போனை பறித்து வீசியதுடன், அவரது கன்னத்தில் அறைகிறார். இந்த வீடியோவை பார்த்த முதல்வர் பூபேஷ் பாகேல், கலெக்டரை பொறுப்பில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டு உள்ளார். ''இது போன்ற நடவடிக்கை, வருத்தத்திற்கு உரியது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கது. எனவே, கலெக்டர் பொறுப்பில் இருந்து, அவர் உடனடியாக நீக்கப்பட்டு உள்ளார்,'' என, முதல்வர் பாகேல் தெரிவித்துள்ளார்.
ரன்பீர் ஷர்மாவின் நடவடிக்கைக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement