பொது செய்தி

இந்தியா

ஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு

Updated : மே 23, 2021 | Added : மே 23, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
திருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை
ஆனந்தய்யா மருந்து, தயாரிப்பு, திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.

இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.

அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் வனமூலிகைகள், அதன் தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டனர்.


latest tamil news



ஆயுஷ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும், இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிக பெரிய ஆயுர்வேத பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு கூடம் திருப்பதியில் உள்ளது. எனவே, இந்த மருந்தை தயாரித்து தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் வாயிலாக மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
24-மே-202115:25:20 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் நல்ல செய்தி. பாராட்டுகள். சித்த மருத்துவர்களை கொரானாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்து கண்டுபிடிக்க தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். நல்ல சிகிச்சை அளித்த சித்த மருத்துவர்களை ஓரம்கட்டிவிட்டனர்
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
24-மே-202114:46:49 IST Report Abuse
I love Bharatham அரசே ஆலங்களில் இருந்து வெளியேறு
Rate this:
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
26-மே-202120:21:32 IST Report Abuse
SexyGuy .ஐயா, குஜராத்தில் கோவில்கள் அரசு வசம் உள்ளன. முதலில் அங்கு சென்று , வென்று வாருங்கள் இருபத்தி ஐந்தாம் புலிகேசி....
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
24-மே-202113:41:28 IST Report Abuse
S.kausalya கோயிலை கவனிக்க அய்யரிடம் கொடுக்க வேண்டும் என்பது தேவை இல்லாத ஒன்று. அதை, கோயிலில் பூஜை செய்யும் எந்த அய்யரும் ஒத்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வேலை சாமிக்கு காலை, மாலை அன்னம் சமர்ப்பித்தல், தெளிந்த நீர் கிடைத்தாலும் அதில் அபிஷேகம், உபயமாக அளிக்கப்படும் வஸ்திரங்களை சாமிக்கு அணிவித்தல் இது மட்டுமே. உபயதாரரிடமிருந்து கிடைக்கும் உபயத்தில் சாமிக்கு அன்னம் படைக்கிறார். கோயில் தொடர்பான நிலம் பற்றிய அறிவு ,, vamsaavaliyaaga வந்துள்ள தற்போதைய தலைமுறை க்கும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X