எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஏழு பேர் விடுதலை விவகாரம்: காங்.,கிற்கு தி.மு.க., வைக்கும் 'செக்'

Updated : மே 24, 2021 | Added : மே 23, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்பதை தவிர்க்க, ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தை, தி.மு.க., கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதிக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 'தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று, ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என
DMK, Congress, CM Stalin, Rajiv Gandhi assassination case

காங்கிரஸ் தரப்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்பதை தவிர்க்க, ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தை, தி.மு.க., கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இரு நாட்களுக்கு முன் ஜனாதிபதிக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 'தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று, ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

அவரது கடிதம், காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை உருவாக்கியது. 'ஸ்டாலின் கடிதத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை' என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், 'சட்டரீதியாக, ஆயுள் தண்டனை குற்றவாளிகள் 25 -30 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே, அவரை விடுவிக்கலாம் என இருந்தால், ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்றார்.

தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் வசந்தராஜ், 'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்து தற்போது பேசுவது சரியல்ல. 'காங்கிரஸ் கட்சியை, கூட்டணியை விட்டு வெளியேற்ற நடக்கும் சதி. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்றார்.

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும், ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதால், தி.மு.க., கூட்டணியில் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் கருத்து மோதல் உருவாகி உள்ளது.

இது குறித்து காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜிவ் நினைவு தினம் அனுசரிக்கும் நேரத்தில், ஏழு பேர் விடுதலை விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம்அளித்தது, காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிருப்தியை அளித்து உள்ளது. அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா; முகமதுஜான் மறைவு காரணமாக, செப்டம்பர் மாதத்திற்குள், ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றை, அழகிரி,பீட்டர் அல்போன்ஸ், இளங்கோவன், தங்கபாலு போன்றவர்கள் கைப்பற்றுவதற்காக, தி.மு.க., தலைமையிடம் காய் நகர்த்த துவங்கி உள்ளனர்.

ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், எந்த கட்சியின் தயவும் இல்லாமல், மூன்றிலும், தி.மு.க., வெற்றி பெற முடியும். எனவே, காங்கிரசுக்கு எம்.பி., பதவி வழங்கி, அக்கட்சி பலத்தை அதிகரிக்க, தி.மு.க., விரும்பவில்லை.அதற்கு இடம் கொடுக்காத வகையில், காங்கிரசுக்கு 'செக்' வைப்பதற்காக ஏழு பேர் விடுதலை விவகாரத்தை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மே-202121:23:44 IST Report Abuse
Pugazh V ராஜ்யசபா வில் மேலும் 3 திமுக எம்.பி.க்கள் அவசியம் தேவை. எனவே மூன்று பேரைத் திமுகவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-மே-202121:23:12 IST Report Abuse
sankaseshan 38 dmk MP கல் பார்லிமென்டில் கிழிச்சது என்ன சொல்லட்டும் செய்தது வெளிநடப்பு மட்டும்தான் .
Rate this:
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
26-மே-202119:38:31 IST Report Abuse
SexyGuy .அருமையான கேள்வி. பாரதீய ஜனதா எம்பிக்கள் அனைவரும் இதுவரை என்ன கிழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நாடே அறியும் தம்பி. ஏன் , காரோண விவகாரத்தில் நமது மாண்புபிகு பிரதமர் என்ன ஆணி புடிங்கினார் என்றே உலகே அறியும். ஊர் ,ஊராக சென்று அவர் தாக்கம் அதிகமாக ஒரு காரணம்.இது உலகே பார்த்து சிரிக்கிறது....
Rate this:
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
26-மே-202119:44:16 IST Report Abuse
SexyGuy .இவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்லர். ஜோடிக்க பட்டவர்கள். ஆயுள் தண்டனை காலத்து மேல் இருந்து விட்டார்கள்....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்அப்போ காங்கிரஸ் கூவறதே ஒரு MP பதவிக்காகத்தானோ? இவர்கள்தான் ராஜிவ் விசுவாசிகளோ? ராஜிவ் கொலையில் ஒப்பாரி வைத்து ஒருவர் ஆட்சியையே பிடித்தார்...
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-மே-202121:06:30 IST Report Abuse
Indhuindian இதெல்லாம் சும்மா லோலோங்கட்டியும் நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் நீ அக்ஷரமாதிரி அஷுங்கற கேசு. அவங்க இருபத்து ஆண்டுகால ஜெயில்லே இருக்காங்க நீங்க பதிவில் இருந்தபோதே அவங்களை விடுதலை பண்ணி அவங்களுக்கு விருது கொடுத்து வீடு கொடுத்து வேலை குடுத்திட்டுருக்கலாமே ஏன் செய்யலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X