பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் விமானத்தில் டாக்டர் திருமணம்:

Added : மே 23, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மதுரை :மதுரையில், திருமணத்திற்காக ஒரு விமானத்தை, 'புக்' செய்து உறவினர்கள், நண்பர்கள் சூழ வானில் பறந்தவாறு, டாக்டர் ராகேஷ் - தீட்ஷணா திருமணம் நடந்தது.ஜம்புரோபுரம்கட்டுமான நிறுவனர் ஜீவரத்தினம் மகள் தீட்ஷணா; மனநல ஆலோசகர். இவரது மாமா மகன் டாக்டர் ராகேஷ். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.திருமணத்தை, 'மதுரை வியக்க நடத்த வேண்டும்; விமானத்தில் நடத்தினால் நன்றாக
பறக்கும் விமானம், டாக்டர் திருமணம்

மதுரை :மதுரையில், திருமணத்திற்காக ஒரு விமானத்தை, 'புக்' செய்து உறவினர்கள், நண்பர்கள் சூழ வானில் பறந்தவாறு, டாக்டர் ராகேஷ் - தீட்ஷணா திருமணம் நடந்தது.ஜம்புரோபுரம்கட்டுமான நிறுவனர் ஜீவரத்தினம் மகள் தீட்ஷணா; மனநல ஆலோசகர். இவரது மாமா மகன் டாக்டர் ராகேஷ். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.திருமணத்தை, 'மதுரை வியக்க நடத்த வேண்டும்; விமானத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும்' என மணமக்களின் தாத்தா விருப்பப்பட, நேற்று மணநாள் குறிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன், தனியார் விமானம், 'புக்' செய்யப்பட்டது.விமானத்தில், 150 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு முன்கூட்டி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு உறவினர்கள், நண்பர்கள் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.காலை, 6:40 மணிக்கு விமானம் மாவட்டத்திற்குள் பறக்க துவங்கியது.ஹிந்து முறைப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, காலை, 7:40 மணிக்கு பறக்கும் விமானத்தில் திருமணம் நடந்தது. காலை, 8:30 மணிக்கு விமானம் தரையிறங்கியது. தொடர்ந்து, அண்ணா நகர் மண்டபத்தில் மற்ற நிகழ்ச்சிகள், விருந்து நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
24-மே-202123:47:36 IST Report Abuse
Mohan டாக்டரே மணம் முடிக்க மேல போனாலும், ஹனிமூனுக்கு கீழேதான் வரணும்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-மே-202123:42:54 IST Report Abuse
Mohan இங்க இருக்கிற தாத்தா எல்லாம் சீக்காளி. உங்க தாத்தா சோக்காளி போல.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-மே-202123:37:17 IST Report Abuse
Mohan என்ன டாக்டரே,ஒருத்தர் கூட மனசார வாழ்த்தவில்லை . இது தேவையா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X