தடுப்பூசி 88% சூப்பர்: கட்டுப்பாடுகளை தளர்த்த பிரிட்டன் யோசனை!

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
லண்டன்: “தற்போது இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ் வகை மற்றும் பிரிட்டனில் காணப்படும் வகையை எதிர்ப்பதில் இரண்டு டோஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது” என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.இங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாவது: பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் 2-ம் டோஸை எடுத்துக்கொண்ட இரு வாரங்களுக்கு பின்னர், பி.1.617.2

லண்டன்: “தற்போது இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ் வகை மற்றும் பிரிட்டனில் காணப்படும் வகையை எதிர்ப்பதில் இரண்டு டோஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது” என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.latest tamil newsஇங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாவது: பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் 2-ம் டோஸை எடுத்துக்கொண்ட இரு வாரங்களுக்கு பின்னர், பி.1.617.2 வகைக்கு (இந்தியாவில் அதிகம் பரவியுள்ள வகை) எதிராக அத்தடுப்பூசி 88% செயல்படுகிறது. அதுவே பிரிட்டனில் பரவிய பி.1.1.7 வகைக்கு எதிராக 93% செயல்திறன் கொண்டிருக்கிறது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி (கோவிஷீல்ட்) இந்தியாவில் பரவியுள்ள வகைக்கு எதிராக 60% செயல்படுகிறது. பிரிட்டனில் பரவியுள்ள வகைக்கு எதிராக 66% செயல்திறன் பெற்றுள்ளது. என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பைசர் மற்றும் கோவிஷீல்டின் முதல் தடுப்பூசி போட்ட 3 வாரங்களுக்கு பின்னர் இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் வகை தாக்கினால் 33% செயல்திறன் இருக்கும், பிரிட்டன் வகை வைரஸ் என்றால் 50% செயல்திறன் இருக்கும் என கூறியுள்ளனர். இம்முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் சுகாதார செயலர் மட் ஹன்காக், திட்டத்தின் சரியான பாதையில் செல்கிறோம் என நம்பிக்கை தெரிவித்தார். இரண்டு டோஸ் எடுத்த பிறகு தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பதை இந்த தரவுகள் காட்டுவதாக கூறினார்.


latest tamil newsஇதன் காரணமாக விரைவில் பிரிட்டன்வாசிகளுக்கு 2-ம் கட்ட தடுப்பூசியை போட்டுவிட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தியாவிலோ தரமான தடுப்பூசியை இலவசமாக தந்தாலும் வதந்திகளின் காரணமாக மக்கள் உயிரை பணயம் வைத்துக்கொண்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - Port Blair,இந்தியா
24-மே-202117:27:13 IST Report Abuse
prakash அரசு அனுமதி கொடுத்தால் நல்லதுதான் ஆனால் டூப்ளிகேட் தடுப்பூசி தயாரிச்சிடாமல் இருக்கணும். அதுக்கு அரசாங்கம் செக்கிங் பாயிண்ட் வைக்கணும் இல்லைன்னா ரெமிடீஸிவேர் மருந்துக்கு டூப்ளிகேட் பண்ணுணது மாதிரி இதுலயும் திருடர்கள் விளையாடி விடுவார்கள்.
Rate this:
Cancel
24-மே-202111:33:44 IST Report Abuse
கிருஷ்ணா உலக சுகாதார நிறுவனம் அனுமதித்த அனைத்து வகையான தடுப்பூசிகளுக்கும் (ஏ.க: pfizer, moderna) அனுமதி அளித்தல் அனைவரும் அவர் அவர்களுக்கு எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று தோன்றுகிறதோ அதை செலுத்தி கொள்வார்கள். இதனால் தடுப்பூசி தட்டுப்பாடும் நீங்கும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள்.
Rate this:
Truth Behind - Tamilnadu,இந்தியா
24-மே-202115:03:29 IST Report Abuse
Truth BehindYou are correct, Including covishield, covaxin and sputnik V....
Rate this:
Cancel
Musthafa - Cuddalore,இந்தியா
24-மே-202111:28:44 IST Report Abuse
Musthafa இந்த தடுப்புஊசி பலன் மற்றும் பயன்பாடு கருத்து கணிப்பு மக்களிடையே தடுப்புஊசி போடுவதற்குண்டான அச்சம் ஏற்படுத்துகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X