இது உங்கள் இடம்: நிர்வாக திறன் வெளிப்பட வேண்டும்!

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (82) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு, நம் முன்னோர் பலர் தானமாகவும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பரிகாரமாகவும், நிலங்களை வழங்கியுள்ளனர்.அதன் வழியே, கோவிலின் அன்றாட பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை
ithu ungal idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு, நம் முன்னோர் பலர் தானமாகவும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பரிகாரமாகவும், நிலங்களை வழங்கியுள்ளனர்.அதன் வழியே, கோவிலின் அன்றாட பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற செய்தனர்.அப்படிப்பட்ட கோவில் சொத்து, அரசியல்வாதிகளாலும், அடாவடி பேர்வழிகளாலும் அனுபவிக்கப்பட்டு வருகிறது.

ஆட்சியாளர்களின் ஆசியோடு, கோவில் சொத்து பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும், கோவில் சொத்தை மிக குறைந்த தொகைக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு அனுபவிக்கின்றனர். அவர்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையும், நிலங்களுக்கான பசலி தொகை உள்ளிட்டவற்றையும் சரிவர கொடுப்பதில்லை.ஏகப்பட்ட ஏக்கர் நிலம் இருந்தும், பல்வேறு கோவில்களில் தினமும் பூஜை நடத்த, பொருளாதார வசதி இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பல ஆண்டுகளாக, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கோவில் சொத்து பாதுகாப்பு, நிர்வாகம் தொடர்பான பல்வேறு குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சில உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.


latest tamil news


கோவில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோவில் வருவாயினங்களை பெருக்கும் வகையில் செயல்பட வேண்டும்.கோவில் நிலம் மற்றும் கட்டட விபரங்களை, புவிசார் குறியீடு செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்; இது வரவேற்கத்தக்கது.ஆனால், அந்த உத்தரவை செயல்பாட்டிற்கு வர செய்வது தான், அமைச்சரின் நிர்வாக திறனை வெளிப்படுத்தும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
24-மே-202121:32:53 IST Report Abuse
Raja திமுகவின் சொல்லும் செயலும் வேறு வேறாகத்தான் இருக்கிறது. அதனால் இந்த அறிவிப்புகள் எல்லாம் எந்த அளவு சிறப்பாக நடைமுறைபடுத்தப்படும் என்று தெரியாது. திமுகவினரே கோயில் சொத்துக்களை அபகரித்து வாடகை கொடுக்காமல் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள்் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ
24-மே-202120:31:22 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     பெங்களூரின் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் பாஜக எம்பி, தேஜஸ்வி சூர்யா தலையிட்ட பிறகு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்சுகளுக்கு கூட அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் அவசரத்துக்கு படுக்கை ஒதுக்க முடியாத நிலைமைக்கு இந்த நகரம் சென்று விட்டது. இந்த முந்திரிக்கொட்டை செய்த வேலை சொதப்பல் ஆகி விட்டது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-மே-202120:16:48 IST Report Abuse
Dhurvesh சென்னையில் 4985 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 29,882 பேருக்குத் தொற்று உள்ளது. சென்னை யில் below 5000 என்று வந்துள்ளது நன்றி புதிய அரசுக்கு
Rate this:
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
24-மே-202120:34:44 IST Report Abuse
Svs Yaadum ooreகணக்கு நாம்ப எழுதுவது தானே ......நாளைக்கு சென்னையில் 4000 என்று தினமும் ஆயிரம் குறைக்கலாம் .......
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-மே-202121:46:54 IST Report Abuse
Dhurveshஅதே தான் எடுபுடி april MAADHAM 600 என்று சொன்னபோதும் நம்பளய அப்புறம் தான் வெற்றி நடை போட தமிழகம் நாறிய விஷயம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X