ஜனநாயக ஆதரவாளர்கள் கிளர்ச்சி; மியான்மர் போலீஸார் படுகொலை

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலை பிரகடனப் படுத்தியது. இதனை அடுத்து அந்நாட்டில் 800க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜூன்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து உலகம் முழுவதும் மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு கண்டனங்கள் குவிந்தன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் போராட்டத்தில்

யாங்கன்: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலை பிரகடனப் படுத்தியது. இதனை அடுத்து அந்நாட்டில் 800க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜூன்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.



latest tamil news


இதனையடுத்து உலகம் முழுவதும் மியான்மர் நாட்டு ராணுவத்துக்கு கண்டனங்கள் குவிந்தன. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் பொதுமக்கள் மீதும் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாக ஊடகங்களுக்கு பொதுமக்கள் பேட்டி அளித்தனர்.

இதனால் மத்திய மியான்மரில் வாழும் மக்கள் எல்லையை நோக்கி விரைந்துள்ளனர் ராணுவத்துக்கு எதிராக புரட்சிகர படைகள் அங்கு உருவாகத் துவங்கிவிட்டன. மியான்மர் நாட்டில் அத்துமீறும் காவல்துறை மற்றும் ராணுவத்தை எதிர்க்க இந்த படையினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.


latest tamil news


இதனையடுத்து தற்போது பாதுகாப்புப் படையினர் பலர், புரட்சிகர போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். மியான்மர்-சீனா எல்லைக்கு இடையே சமீபத்தில் புரட்சியாளர்களும் மியான்மர் பாதுகாப்புத் துறைக்கும் நடந்த போரில் பல பாதுகாப்பு படை காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மியான்மர் நாட்டு காவலர்களின் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்படுகின்றன. மேலும் காவல்துறையினர் நான்கு பேரது கைகள் கட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு போராட்டக்காரர்களும் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
24-மே-202108:00:15 IST Report Abuse
Amirthalingam Shanmugam மியான்மர்-சீனா எல்லைக்கு இடையே சமீபத்தில் புரட்சியாளர்களும் மியான்மர் பாதுகாப்புத் துறைக்கும் நடந்த போரில் பல பாதுகாப்பு படை காவலர்கள் கொல்லப்பட்டனர். மிகவும் யோசிக்கவேண்டிய விஷயம் சீனாவின் குள்ளநரித்தனம் நிச்சயம் அங்கு குடிகொண்டுயிருக்கும்.
Rate this:
Cancel
Siva - Johor,மலேஷியா
24-மே-202105:55:28 IST Report Abuse
Siva ஜனநாயகத்தின் சாபக்கேடு மியாண்மர், வட கோரியா, சீனா.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
24-மே-202105:20:34 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பாவம் குழந்தைகள் மற்றும் பெண்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X