அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பூஞ்சைக்கும் அரசு காப்பீட்டில் சிகிச்சை: சீமான் வலியுறுத்தல்

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: 'கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெற, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை: கறுப்பு பூஞ்சை நோய் பரவல், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் கறுப்பு
NTK, Seeman, BlackFungus, நாம் தமிழர் கட்சி, சீமான், கறுப்பு பூஞ்சை, அரசு காப்பீடு

சென்னை: 'கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெற, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கறுப்பு பூஞ்சை நோய் பரவல், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் கறுப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டு வரும் செய்திகள், பெரும் கவலை தருகின்றன. கறுப்பு பூஞ்சை நோயை துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்த, தமிழக சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக விட்டால், உயிருக்கே ஊறு விளைவிக்கும்.


latest tamil news


கறுப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், போதிய அளவில் தாமதமின்றி கிடைக்க, உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி பிரிவுகளை அமைக்கவும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மே-202104:36:24 IST Report Abuse
ஆப்பு இவுரு எப்பவும் கருப்பு சட்டை போடுவதால் கரும்பூஞ்சைக்கு ஆதரவு கேக்குறார்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-மே-202120:00:39 IST Report Abuse
Vena Suna இன்சூரன்ஸ் கம்பெனி காரன் ஒத்துக்க மாட்டான்
Rate this:
Cancel
24-மே-202118:32:26 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஓட்டு சதவீதம் கொஞ்சம் அதிகம் வாங்கி விட்டார். அதனால் எதிர் கட்சி தலைவர் பதவியை தானே எடுத்து கொண்டு உள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X