பொது செய்தி

இந்தியா

செல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையா?

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதற்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. பின், 'மனிதர்களிடம் இருந்து வளர்ப்பு பிராணிகளுக்கு இந்நோய் செல்லக்கூடும்; அந்த விலங்குகளிடம் இருந்து மிக வேகமாக மனிதர்களுக்கு பரவும்' என,

புதுடில்லி: சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே உலுக்கி வருகிறது.



latest tamil news



இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதற்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. பின், 'மனிதர்களிடம் இருந்து வளர்ப்பு பிராணிகளுக்கு இந்நோய் செல்லக்கூடும்; அந்த விலங்குகளிடம் இருந்து மிக வேகமாக மனிதர்களுக்கு பரவும்' என, கொரோனா தாக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில் நம்பப்பட்டது. இதனால், சீனா உள்ளிட்ட நாடுகளில் வளர்ப்பு பிராணிகள் கொல்லப்பட்டன. சில நகரங்களில் வளர்ப்புப் பிராணிகளான நாய்களும், பூனைகளும் கைவிடப்பட்டன. அவை, உணவு கிடைக்காமல் சாலைகளில் அலைந்து திரிந்து மடிந்தன. இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.


latest tamil news



'விலங்குகள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை' என, உலக சுகாதார அமைப்பும் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுடன் பல விலங்குகள் கண்டறியப்பட்டன. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரசின் 2வது அலை வீசி வருகிறது. சில நாடுகளில் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 'பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news



விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக எந்தவொரு தரவும் இல்லை. இதனால் யாரும் செல்லப் பிராணிகளை கைவிட வேண்டாம். நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என, சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாய்களைத் தாக்கும் நோய்த் திரிபுகள் வேறுபட்டவை. அதற்கும் மனிதர்களைத் தாக்கும் கொரோனாவுக்கும் தொடர்பில்லை. நாய்களுக்கான தடுப்பூசி ஏற்கனவே கிடைக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-மே-202117:41:07 IST Report Abuse
RajanRajan நாய் குட்டிகளை தாக்கும் பார்வோ வைரஸ் குரானாவை போ வேகமாக மற்ற நாய்களை தாக்கி உயிரிழப்பு ஏற்படும். ஆனால் வளர்ந்த நாய்களுக்கு பாதிப்பு அதிகமில்லை. இங்கும் தடுப்பூசி தான்தீர்வு..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-202116:28:45 IST Report Abuse
தமிழவேல் ஆமா, மனுஷனுக்கே மருந்து கிடைக்கல இதுல இதுவேற..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X