செக்ஸ் புகார்; பள்ளி ஆசிரியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செக்ஸ் புகார்; பள்ளி ஆசிரியர் கைது

Updated : மே 25, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (103)
Share
சென்னை: சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை அடுத்து ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜகோபால் எனும் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போதே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அநாகரீகமாக
Sexual Harassment, Teacher, Student

சென்னை: சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை அடுத்து ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜகோபால் எனும் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போதே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அநாகரீகமாக பேசுவதாகவும், வாட்ஸ்-ஆப் செயலியில் பாலியல் உணர்வை தூண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மாணவிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், உரிய விசாரணை நடத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக எம்பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதைதொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.


latest tamil newsஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து புகாரளித்த மாணவியையும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து வருகின்றனர்.

இதற்கிடையே பாலியல் புகார் எழுந்ததால் ஆசிரியர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


ஆசிரியர் ராஜகோபால் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வாக்குமூலம்

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலிடம் எழுத்துபூர்வ வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X