கேரள சட்டசபையில் ஒலித்தது தமிழ்: தாய் மொழியில் உறுதிமொழி கூறிய தேவிகுளம் எம்.எல்.ஏ.,

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் ஒருவர், தனது தாய் மொழியான தமிழில் உறுதி மொழி கூறி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.கேரளாவில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி அமைத்து உள்ளனர். இந்நிலையில் இன்று

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் ஒருவர், தனது தாய் மொழியான தமிழில் உறுதி மொழி கூறி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



latest tamil news




கேரளாவில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி அமைத்து உள்ளனர். இந்நிலையில் இன்று கேரள சட்டசபை கூடியது. இதில், புதிதாக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளின் உறுப்பினர்களுக்கும், தற்காலிக பேரவைத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil news



இதில் கேரள இடுக்கி மாவட்ட தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழரான வழக்கறிஞர் ராஜா, தனது தாய் மொழியான தமிழில் பதவியேற்றுக் கொண்டார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பதிவு ஏற்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்முறையாக சட்டசபை உறுப்பினராக பதவியேற்கும் ராஜா, தனது இளங்கலைப் பட்டப் படிப்பை, கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
28-மே-202104:20:33 IST Report Abuse
Siva Kumar தமிழ்நாட்டு சட்டசபையில் தமிழை தவிர வேறு மொழியில் பதவி ஈர்க்க விடுவார்களா இந்த திராவிஷ கட்சியினர்.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
25-மே-202123:40:34 IST Report Abuse
NARAYANAN.V தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழை வைத்துக்கொள்வது தமிழக அரசின் உரிமை .அதே சமயம் மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற நியதி வேண்டும்.வேலை வாய்ப்பு தமிழ்நாட்டோடு நின்றுபோவதில்லை.இளம் தலை முறையினரை எல்லா வகையிலும் ஆக்கமும் ஊக்கமும் உடையவர்களாக ஆக்கவேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை.அரசியல் சித்துகளுக்காக மொழியை ஒரு ஆயுதமாக கட்சிகள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
25-மே-202102:41:17 IST Report Abuse
Oru Indiyan தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மலையாளி மலையாலத்திலோ, ஒரு ஹிந்தி பிஇஎஸ் மனிதர் ஹிந்தியிலோ, சட்டமன்ற உறுப்பினர் உறுதிமொழி எடுக்க முடியுமா? எடுத்தாலும், அவர்கள் தங்கள் தலையுடன் சட்டமன்றத்தை விட்டு வெளியில் செல்ல முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X