மக்கள் உயிரிழப்பதைக் கொண்டாடுகிறதா காங்கிரஸ்?: ம.பி., முதல்வர் கேள்வி

Added : மே 24, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
போபால்: கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதை காங்கிரஸ் கொண்டாடுகிறதா என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.மத்திய பிரதேசத்தில் கொரோனா தொடர்பான இறப்புகளை மாநில அரசு குறைவாக கணக்கு காட்டுவதாக முன்னாள் காங்., முதல்வர் கமல் நாத் குற்றம் சாட்டினார். மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்
Congress, CelebratingDeaths, Shivraj Singh Chouhan, Kamalnath, CovidDeaths, MP, காங்கிரஸ், மக்கள், உயிரிழப்பு, கொரோனா, மரணம், மபி, மத்திய பிரதேசம், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான்

போபால்: கொரோனாவால் மக்கள் உயிரிழப்பதை காங்கிரஸ் கொண்டாடுகிறதா என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொடர்பான இறப்புகளை மாநில அரசு குறைவாக கணக்கு காட்டுவதாக முன்னாள் காங்., முதல்வர் கமல் நாத் குற்றம் சாட்டினார். மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுநோயால் இறந்துவிட்டதாகக் கூறினார்.

இது தொடர்பாக கமல்நாத் கூறுகையில், ‛நான் 26 மாவட்டங்களின் தகவல்களை கணக்கிட்டுள்ளேன். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1,27,000 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரை, அவர்களில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்,' எனக்கூறினார்.


latest tamil news


தனது கருத்துக்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பீதியை ஏற்படுத்தியதாக கமல்நாத் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கமல்நாத் கூறிய கருத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: காங்கிரஸ் தீவைத்துத் கொளுத்த தயாராகி வருகிறது. கமல்நாத் இதற்கு பதிலளிக்க வேண்டும். நீங்கள் மரணத்தைக் கொண்டாடுகிறீர்களா? கமல்நாத்தின் மோசமான கூற்றுக்கு சோனியா உடன்படுகிறாரா என நான் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
25-மே-202108:56:44 IST Report Abuse
thamodaran chinnasamy மத்திய பிரதேச முதல்வரின் கூற்று காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டுகிறது. இப்போது மக்களுக்கு தேவை நம்பிக்கை வூட்டுதல் மட்டுமே .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202108:23:11 IST Report Abuse
Sampath Kumar அவனுக ஏன் சார் சிரிக்க போறாங்க அவனுகளே காலி ஆகி விட்டார்கள் எல்லாம் உங்க கையாலாகாத தானம் தான் காரணம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
25-மே-202107:15:15 IST Report Abuse
Darmavan காங்கிரஸ் ஒரு கேவலமான சந்தர்ப்பவாத அரக்க குணம் கொண்ட கட்சி.இது நோயுற்றவர்களுக்கு செய்த உதவி என்ன.கொடுத்த நன்கொடை என்ன திருடர்கள் இறப்பில் மலிவு அரசியல் செய்யும் கேவலமானக்கூட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X