மாத்ரு ஸ்ரீ வெங்காமம்பா என்றொரு பரம பக்தை| Dinamalar

மாத்ரு ஸ்ரீ வெங்காமம்பா என்றொரு பரம பக்தை

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (3)
Share
மாத்ரு ஸ்ரீ வெங்காமம்பாஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் பிறந்தவர் . சிறு வயது முதலே திருமலை நாதரான சீனிவாசப் பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர்.இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தபோதும் இல்லற சுகத்தை மறுத்தார்.பெருமாளே கதி என பக்தியில் கரைந்தார் கவிதையாகlatest tamil newsமாத்ரு ஸ்ரீ வெங்காமம்பா
ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் பிறந்தவர் . சிறு வயது முதலே திருமலை நாதரான சீனிவாசப் பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவர்.
இதன் காரணமாக வெங்கமாம்பா திருமணத்தை வெறுத்தார் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தபோதும் இல்லற சுகத்தை மறுத்தார்.பெருமாளே கதி என பக்தியில் கரைந்தார் கவிதையாக பொழிந்தார்.
கணவர் வருவதற்கு முன்பிருந்த நான் வைத்துக் கொண்டிருக்கும் பூ பொட்டு என்ற மங்கல சின்னங்களை கணவர் இறந்ததற்காக எதற்கு எடுகக வேண்டும் என்று சொல்லி பூவும் பொட்டும் வைத்துக்கொள்வதில் உறுதியாக இருந்தார்.
இவரது உறுதியையும் ஆன்மீக பற்றையும் பார்த்துவிட்டு கிராமத்தினர் நாளடைவில் அவரை ‛தேவுடம்மா' எனச் சொல்லி வழிபட்டனர். வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும், பாடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்,ஒரு நாளில் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
இங்கு வந்த பிறகு ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் எழுதி மக்களுக்கு படைத்தார்.திருமலையையும், திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றினார்.


latest tamil news


இப்படி வேங்கடவனே கதி என வாழ்ந்த வெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார்.தினந்தோறும் காலையில் வேங்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள் விதவையான வெங்கமாம்பா பெருமாளுக்கு தொந்திரவு தருவதாக கருதி அவரை கோயிலுக்கு எளிதில் வரமுடியாத துாரத்தில் உள்ள ‛தும்புரகோணா' என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வேங்கடவன் தனக்கு வெங்கமாம்பாவின் முத்தாலான அர்ச்சனை மிகவும் பிடிக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக வெங்கமாம்பாவை எளிதாக குகையில் இருந்து வரவழைத்து வழக்கம் போல இரவு நேர முத்து அர்ச்சனையை ஏற்றுக்கொண்டார்.மறுநாள் காலை கதவை திறந்த அர்ச்சகர்கள் வழக்கம் போல முத்துக்கள் சிதறியிருப்பதை பார்த்துவிட்டு இது வேங்கடவனின் திருவிளயைாடல், தெரியாமல் வெங்காமாம்பாவை அவமதித்துவிட்டோம் என மன்னிப்பு கேட்டனர். அன்று வெங்கமாம்பா இரவில் துவங்கிய ஆரத்தி இன்றும் ‛முக்தியாலு ஆரத்தி' என்ற பெயரில் கோவிலில் தொடர்ந்து நடந்து வருகிறது.
1730 ம் ஆண்டு பிறந்த வெங்கம்மாம்பா தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையில் ஜீவசமாதி அடைந்தார்.இவர் நினைவாக இவரது பெயரில்தான் தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. மாத்ரு தரிகொண்ட ஸ்ரீ வெங்காமாம்பா நித்யா அன்னதானக்கூடம் என்று பெயரிடப்பட்ட இம்மண்டபத்தில் கொரோனா இல்லாத காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் சாப்பிடுவர்.
பதினேழாம் நுாற்றாண்டில் பழமையான கிராமம் மற்றும் நம்பிக்கைகளின் பின்னனியில் பிறந்தவர் என்றாலும் தான் கொண்ட கொள்கை காரணமாக விதவைக் கோலம் போட துணிந்து மறுத்தவர் என்ற முறையிலும், கல்வியிலும் கவிதையிலும் தனித்து விளங்கி வேங்கடவனின் அபார அருளாசி பெற்றவர் என்ற நிலையில் வாழ்ந்த தெய்வமாக இன்றும் மக்களால் அவரது ஜீவ சமாதியில் வணங்கப்படும் தெய்வமாக வீற்றிருக்கும் வெங்கமாம்பாவின் பிறந்த நாளான இன்று (25/05/2021) திருமலையில் அவரது 291 வது ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இத்தனை நாள் இல்லாவிட்டாலும் இனி திருமலை திருப்பதியில் உள்ள அன்னதானக் கூடத்தில் உணவருந்தும் போது பக்தர்களாகிய நீங்கள் ஸ்ரீவெங்காமாம்பாவை நிச்சயம் நினைத்துக் கொள்வீர்கள்தானே.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X