இன்று முதல் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

Updated : மே 25, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (62)
Advertisement
சென்னை: 'ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை திறந்திருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் முதல், 31ம் தேதி வரை, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என, முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதனால், இந்த மாதம் உணவுப்பொருட்கள் வாங்காதவர்கள் சிரமப்படும் சூழல்
ரேசன் கடைகள், இயங்கும், தமிழக அரசு

சென்னை: 'ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை திறந்திருக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல், 31ம் தேதி வரை, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என, முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால், இந்த மாதம் உணவுப்பொருட்கள் வாங்காதவர்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், கொரோனா நிவாரண தொகையையும், ஏராளமானோர் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்காக ரேஷன் கடைகளை, குறிப்பிட்ட நேரம் திறக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


latest tamil news




அதைத் தொடர்ந்து, சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, இன்று (மே 25) முதல் பொது வினியோக திட்டத்தில் இயங்கும் ரேஷன் கடைகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை திறந்திருக்கும்.

ஏற்கனவே, ஏ.டி.எம்., தொடர்பான வங்கி சேவை அனுமதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம். தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
25-மே-202110:36:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஹைதெராபாத் கூட்டத்தை தடுத்து இருந்திருந்தால் குரோணவை கட்டு படுத்தி இருக்கலாம் இல்லையா கண்மணி. முதலில் அடுத்தவர் மேல் பழி போடுவதை நிறுத்திவிட்டு mask போடுங்க
Rate this:
Cancel
25-மே-202108:55:01 IST Report Abuse
மனுநீதி இனிமேல் ரேஷன் கார்ட் வச்சுக்கிட்டு ஊரே சுத்தலாம் spreaders. ஊரிலே ரேஷன் கார்டு இருக்குன்னா நாளைக்கு இஸ்பெசல் பஸ் கூட விடுவாங்க நம்ப கலெக்டருங்க...
Rate this:
Cancel
25-மே-202108:51:47 IST Report Abuse
மனுநீதி 23 ஆம் புலிகேசி ஆட்சியே தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X