எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஒருதலைபட்சமாக வைகோ குரல் ஒலிப்பது ஏன்?

Updated : மே 24, 2021 | Added : மே 24, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
'துாத்துக்குடியில், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும் என்ற, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் குரல் ஒருதலைபட்சமாக இருக்கிறது' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, வைகோ ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 13 பேரை சுட்டுக்
ஒருதலைபட்சம், வைகோ, குரல் ஒலிப்பது ஏன்?

'துாத்துக்குடியில், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும் என்ற, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் குரல் ஒருதலைபட்சமாக இருக்கிறது' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, வைகோ ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 13 பேரை சுட்டுக் கொன்ற போலீசார் மீது, கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது தான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார். 'அவரது கோரிக்கையில் நியாயம் இல்லை என்றும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் உயிர் நீத்த போலீசாருக்காகவும், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்காகவும், வைகோ குரல் கொடுக்காதது ஏன்' என்றும், சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை, கே.கே.நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சீனிவாசன், சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாவது: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கரார்களின் மீதான வழக்குகள், புதிய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது, வழக்குகள் பதிய வேண்டும் என, புதிய கருத்தை, வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ஒரு மாவட்டத்தில் ஏற்படும் போராட்டத்தால், அருகாமையில் உள்ள இதர மாவட்டங்களிலும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என, அரசு கருதும். போராட்ட களத்தில், அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையை, போலீஸ் துறை வாயிலாக, அரசு எடுக்கும்.

போலீஸ் துறை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் கட்டளையை, கீழ் நிலையில் பணிபுரியும் போலீசார் நிறைவேற்றுவர். அது, அவர்களின் கடமை. அந்த அடிப்படையில் தான் போலீசார், தங்கள் கடமையை நிறைவேற்றி உள்ளனர். எனவே, தங்கள் கடமையை செய்த போலீசாரை கைது செய்ய, வைகோ சொல்வது, ஒருதலைபட்சமாக உள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு கொடுக்க வேண்டிய நிவாரணங்களுக்கு, வைகோ குரல் கொடுத்தது வரவேற்கக் கூடியது. ஆனால், போலீசாரை கைது செய்ய சொல்லும் கருத்தை, ஏற்றுக் கொள்ள முடியாது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை சம்பவம் நடந்த போது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பல போலீசார் இறந்தனர். சிலர் படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டு, தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் ராஜிவுடன் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியினரின் குடும்பத்தினருக்கும், அரசு வேலை, நிவாரண உதவிகள் வழங்க, அரசு முன்வர வேண்டும் என, வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை. பொது வாழ்க்கையில், ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கிற செயலை, இனியாவது, வைகோ கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Chennai,இந்தியா
30-மே-202120:56:24 IST Report Abuse
Karthik தலைமை செயலாளர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி சூடு நடந்து இருக்காது ...போலீஸ் தன்னெழுச்சியாக துப்பாக்கி சூடு நடத்துவது இல்லை
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
26-மே-202117:07:35 IST Report Abuse
Indhuindian வைகோவுக்கு கொள்கைக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-மே-202121:40:01 IST Report Abuse
madhavan rajanகொள்கையே இல்லாமல் அரசியல் செய்வதுதான் அவரது கொள்கையே. தன்னுடைய ஆதாயத்திற்காக தன குடும்பத்தாரைக் கூட நடுத்தெருவில் விட தயங்கமாட்டார். தன்னை நம்பி வந்தவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டார் தன சுயநலத்திற்காக....
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
26-மே-202113:38:52 IST Report Abuse
Nakkeeran அப்படியே சாதிக் பாஷா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது இதற்க்கு ஸ்டாலின் மற்றும் ஜாபர் சேட் தான் பொறுப்பே ர்க்கவேண்டும் என்று 2016 ல் கூறிய நீங்கள் இது சம்பந்தமாகவும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதுங்களேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X