கொரோனா காலத்திலும் கொடுமை... கொள்ளையடிப்பதில் கூட்டு சேர்ந்து நாட்டாமை!

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021
Advertisement
கொரோனாவும், வெயிலும் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், மக்கள் முழு ஊரடங்கில், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.அந்த ஒரு நாளின் மாலையில், மித்ரா 'வீடியோ காலில்', சித்ராவிடம் பேசினாள்.''அக்கா. எப்படி இருக்கீங்க? கொரோனாவ 'கன்ட்ரோல்' பண்ணுவாங்களா இல்லையா? தொற்று பாதிக்கப்படறவங்கள்ல, நம்ம மாவட்டம் 'டாப்'ல போயிட்டு இருக்கே,'' ஆரம்பித்தாள் மித்ரா.''ஏகப்பட்ட
 கொரோனா காலத்திலும் கொடுமை... கொள்ளையடிப்பதில் கூட்டு சேர்ந்து நாட்டாமை!

கொரோனாவும், வெயிலும் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், மக்கள் முழு ஊரடங்கில், வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.

அந்த ஒரு நாளின் மாலையில், மித்ரா 'வீடியோ காலில்', சித்ராவிடம் பேசினாள்.''அக்கா. எப்படி இருக்கீங்க? கொரோனாவ 'கன்ட்ரோல்' பண்ணுவாங்களா இல்லையா? தொற்று பாதிக்கப்படறவங்கள்ல, நம்ம மாவட்டம் 'டாப்'ல போயிட்டு இருக்கே,'' ஆரம்பித்தாள் மித்ரா.

''ஏகப்பட்ட குழப்பம்டி மித்து. ஜி.எச்.,சில், என்ன நடக்குதுன்னே தெரியல. பெரிய ஆபீசர்ங்க கண்ணுல மண்ணை துாவிட்டு, சிலர் 'டீம்' சேர்ந்து, கொரோனா நோயாளிங்ககிட்ட காசு பறிக்கிறாங்களாம்.

''இவங்களுக்கு 'டீம் லீடர்' போல செயல்படற சில டிரைவர்களை 'கவனிச்சுட்டா' போதுமாம். ஆக்ஸிஜன் 'பெட்' உடனே கெடைச்சிடுதாம். ஆஸ்பத்திரிக்குள்ள இருக்கற அப்பாவி யாரையாவது வேறு வார்டுக்கு மாத்திட்டு, அத கொடுத்திடறாங்களாம்,''

''ரொம்ப சீக்ரெட்டா நடந்துட்டு இருக்கற இந்த விஷயத்தை, 'தோழர்' ஒருவர் வெளிப்படுத்திட்டாரு. அவரோட அம்மாவை 'அட்மிட்' பண்ணியிருந்தப்ப தான் விஷயம் தெரிய வந்திருக்கு. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும், இந்த விவகாரத்த கொண்டு போயிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஆனாலும், இந்த பிரச்னையை கவனிக்கிற முக்கிய பொறுப்பு 'டீனு'க்கு தான் இருக்கு. ஆனா, புதுசா அறிவிச்சிருக்கிற 'டீன்', திருப்பூரில் 'சார்ஜ்' எடுக்காம இருக்காரு. தொற்று கன்னாபின்னான்னு, அதிகமாக இருக்கற டைம்ல, எப்படி சமாளிக்கிறதுன்னு, புதுசா வர்றவர் தயங்கறாரு போல,''
''தனக்கு நெருங்கியவரோட அரசியல் செல்வாக்க பயன்படுத்தி, வேற இடத்துக்கு போக அவரு 'ட்ரை' பண்ணிட்டு இருக்காருன்னு, டாக்டர்களே பேசிக்கிறாங்க. இதனால, 'இக்கட்டான நிலையிலும், பொறுப்பேற்காம இருக்காரு; கொஞ்சம் சீக்கிரமாக அனுப்பி வைங்க'ன்னு, ெஹல்த் செக்ரட்ரிக்கு, மாவட்ட ஆபீசர் 'மெயில்' பண்ணிட்டாரு,'' என்றாள் மித்ரா.

''அதெல்லாம் சரிதான்டி. ஆனா, கொரோனாவுக்கு, ட்ரீட்மென்ட் கொடுக்க, பிரைவேட் ஆஸ்பிட்டல்காரங்க சிலர், அதிகமா 'பீஸ்' வாங்கறதா புகார் கிளம்பியிருக்கு. பாதிக்கப்பட்ட பலரும் ஆதாரத்தோட, ஜே.டி., ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க. இந்த 'பைல்' எல்லாம், மாவட்ட ஆபீசர் டேபிளுக்கு போயிருக்கு. அவர் சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்னு சொல்றாங்கடி,''

''அதுமட்டுமில்லடி. சில சேவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் சேர்ந்து, ஆக்ஸிஜன் பஸ்சும் ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காங்க. நோயாளிகள அவங்களே கூட்டிட்டு போய், ஹாஸ்பிட்டல்ல சேக்கறாங்க,''

''ஆனா, சில ஆஸ்பிட்டல்கள்ல, சரியா 'சப்போர்ட்' பண்றது இல்லையாம். 'எங்களுக்கு இருக்கிற வேலையையே பார்க்க முடியல. நர்ஸ்ங்க போதியளவு இல்லை. இதுல நீங்க வேற நோயளிகள கூட்டிட்டு வந்தா எப்டி பார்க்கிறது... இப்படி எதையாவது சொல்லி தட்டிக்கழிக்கிறாங்களாம். இதையும், மாவட்ட ஆபீசர் கவனிச்சா பரவாயில்லே...'' விளக்கினாள் சித்ரா.

அப்போது, மித்ராவின் மொபைல் போன் ஸ்கிரீனில், 'கொரோனா தடுப்பு பணியை கண்காணிக்க, மாவட்டம் வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பு' என்ற 'வாட்ஸ் அப்' தகவல் வந்தது.அதை படித்த மித்ரா, ''ஆமாங்க்கா... லிங்கேஸ்வரர் ஊர் தொகுதி 'வி.ஐ.பி.,' எங்கேயும் போறதில்லையாம். எங்கிருக்காருன்னு, அவரோட கட்சிக்காரங்களுக்கு கூட தெரியாதாம். 'அவரை, கண்டா வரச்சொல்லுங்கன்னு', சிலர் பாட்டு பாடறாங்களாம்,'' என்றாள்.

''அதிகாரிகளுக்கு, கட்சிக்காரங்க எந்த இடையூறும் செய்யக்கூடாதுன்னு, சி.எம்., சொல்லியும், கரைவேட்டிக்காரங்க அடங்க மாட்டேங்கறாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஏனுங்க்கா... இது எங்க?''

''திருப்பூரில் ஊரடங்கு விதிமீறி திறந்து வைச்சிருந்த கடைக்காரங்க மேல, ஆபீசர்ங்க 'ஆக்ஷன்' எடுக்க போனாங்க. ஆளுங்கட்சிக்காரங்க சிலரு, அவங்களுக்கு போன் போட்டு, 'வியாபாரிகள டிஸ்டர்ப் பண்ணாதீங்க'ன்னு, டார்ச்சர் பண்றாங்களாம்,''

''இப்படி 'டார்ச்சர்' பண்ற கட்சிக்காரங்க மேல, கட்சித்தலைமை கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கோணும். அப்பத்தான், மக்களுக்கும் நம்பிக்கை வரும்,'' விளக்கினாள் சித்ரா.

''கொரோனா ஊரடங்கில, 'சரக்கு' சேல்ஸ் பட்டய கிளப்புதாம்,'' என, 'டாஸ்மாக்' மேட்டர் பேசினாள் மித்ரா.

''ஏன், மித்து, இதை கன்ட்ரோல் பண்ணவே முடியாதா?'' என்றாள் சித்ரா.

''ஊரடங்கால், கடை மூடியிருந்த போதும், பல இடங்களில் சட்ட விரோதமா மது பதுக்கி வைச்சு விக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கே.வி.ஆர்., நகர் ஸ்டேஷனில், மது விற்ற எப்.ஓ.பி., ஒருத்தரை பிடிச்சாரு,''

''விசாரிச்சதில, ஸ்டேஷன்ல இருக்க சில போலீஸ்காரங்களே, சரக்கு விற்க சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்கற விஷயம், தெரிஞ்சுதாம்,'' என்றாள் மித்ரா.

''இதே மாதிரி தான்டி, லிங்கேஸ்வரர் ஊர்லயும், 'சரக்கு' கனஜோரா விக்கறாங்களாம். குறிப்பா, பந்தம்பாளையம், போத்தம்பாளையம், சாமந்தன்கோட்டை ஆகிய இடத்தில, ஒரு குவார்ட்டர், 400லிருந்து, 500 ரூவா வரைக்கும் விக்கிறாங்களாம்,''

''அக்கா, மாவட்டம் பூராவும் எல்லா இடத்திலும், 'சரக்கு' தட்டுப்பாடில்லாம கிடைக்குது,'' சொன்ன மித்ரா, ''ஆதாரம் இருந்தும் ஆபீசர்ஸ் அடக்கி வாசிக்கிறாங்க. அந்தளவுக்கு பொலிடிக்கல் பிரஷராம்,'' என புதிர் போட்டாள்.''சஸ்பென்ஸ் வெக்காம சொல்லுடி''

''அக்கா, உடுமலை சப்-டிவிஷன்ல இருக்க ஒரு ஸ்டேஷன் ஆபீசரு நடந்துக்குற விதம் சரியில்லையாம். லேடி போலீஸ்கிட்ட ரொம்ப 'ஜொள்ளு' விடறதே வேலையாம். ஏற்கனவே, தன்னோட பிறந்த நாளுக்கு, கட்சிக்காரங்க, அப்புறம், போலீஸ் கேஸ் உள்ள சிலரையும் கூப்பிட்டு, தன் 'புகழ்' ஓங்கணும்னு, ஸ்டேஷன்லேயே வைச்சு 'கேக்' வெட்டி கொண்டாடினாராம்,''

''ஆனா, மாவட்ட ஆபீசருக்கு தெரியாம, இந்த 'கூத்தை' ஒற்றர் படையினர், கனகச்சிதமா மூடி மறைச்சிட்டாங்களாம்''

''அவங்க என்ன வேணாம்னாலும் பண்ணுவாங்கடி. ஆட்சி மாறியும், காட்சி மாறலைங்ற கதையால்ல இருக்குது,'' என சலித்து கொண்ட சித்ரா, ''மித்து. கொலையை, தற்கொலைன்னு மூடி மறைச்ச வழக்குல, ஊட்டிக்கு துாக்கியடிக்கப்பட்ட ஒரு போலீஸ் ஆபீசர், மினிஸ்டருக்கு பி.எஸ்.ஓ.,வா இருக்குறார்ன்னு போன வாரம் பேசினோம்ல,'' என்றாள்.

''ஆமாங்க்கா, அது என்னாச்சு?''

''அந்த விஷயம், மினிஸ்டர் காதுக்கு போனதும், ரொம்ப 'அப்செட்' ஆகிட்டாராம். அதனால, அவரை மாத்த முடிவு பண்ணிட்டாராம்,'' சொன்ன சித்ரா, தனது மொபைல் போன் ஸ்கிரீனில் ஒளிர்ந்த தடுப்பூசி பற்றி தகவலை படித்துவிட்டு ''சி.எம்., வந்துட்டு போனதுல, எதுவும் விசேஷம் உண்டா?'' என்றாள்.

''ஐ.கே.எப்., கேம்பஸில் தான், சி.எம்.,மின், 'ப்ரோக்ராம்' பிக்ஸ் பண்ணியிருந்தாங்க. திடீர்னு நேதாஜி அப்பேரல் பார்க்குக்கு மாத்திட்டாங்க. இதனால, 'அப்செட்' ஆன, ஐ.கே.எப்., நிர்வாகத்தினரு, 'அது, 10 ஆயிரம் பேர் வந்து போற இடம். இங்க நடத்துறது தான் 'சேப்டி'யா இருக்கும்'ன்னு சொன்னாங்களாம்,''

''அங்க நடத்தினா, 'ஆன் தி வே'ல, சி.எம்., கோயமுத்துாரு போறதுக்கு ஈஸியா இருக்கும்னு சொல்லி, நடத்திட்டாங்களாம்,'' என மித்ரா கூறியதும், ''ஓ.கே., மித்து, நாளைக்கு கூப்டறேன்,'' என போன் இணைப்பை துண்டித்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X