சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு மீறல்: வாகனங்கள் பறிமுதல்

Added : மே 25, 2021
Share
Advertisement
திருவள்ளூரில், முழு ஊரடங்கை மீறி, சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்திவாசிய பணிக்கும், இ - பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே பயணிக்கலாம் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து,

திருவள்ளூரில், முழு ஊரடங்கை மீறி, சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்திவாசிய பணிக்கும், இ - பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே பயணிக்கலாம் என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, திருவள்ளூர் டி.எஸ்.பி., துரைப்பாண்டியின் தலைமையிலான போலீசார், நேற்று, திருவள்ளூர் நகரில், காமராஜர் சிலை, தேரடி, மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.இ - பதிவு பெற்ற வாகனங்கள் மற்றும் மருத்துவம், சுகாதார துறை உள்ளிட்ட, அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளித்தனர். இதைத் தவிர, பிற காரணங்கள் கூறி சாலையில் வந்த, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுதும், இதுவரை, 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்ததாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.அதேபோல், மாமல்லபுரம் பகுதி சாலையிலும், போலீசார் கண்காணித்தனர்
- நமது நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X