ரேஷன் கடை திறப்பால் தொற்று பரவும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை திறப்பால் தொற்று பரவும் அபாயம்

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (35)
Share
சென்னை : தளர்வில்லா ஊரடங்கில், ரேஷன் கடைகளை திறப்பதால் பொருட்கள் வாங்க வருவோரால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு, தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால், அந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.இந்நிலையில், 'அரசின்
ration shop, ration, Corona

சென்னை : தளர்வில்லா ஊரடங்கில், ரேஷன் கடைகளை திறப்பதால் பொருட்கள் வாங்க வருவோரால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால், அந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், நேற்று ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், 'அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மட்டும் முழுதுமாக பின்பற்றினால், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும்' என, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்தார்.


latest tamil news



திடீரென, 'இன்று முதல் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்' என அரசு நேற்று மாலை அறிவித்தது.மேலும், 'கொரோனா நிவாரண தொகை 2,000 ரூபாயை பெறாதவர்களுக்காக 25ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கிலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, பணம் வினியோகம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைக்கு செல்லும் போது, அதற்கு உரிய ஆதாரமாக, ரேஷன் கார்டுடன் தவறாது செல்ல வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களில் இன்னும் 7.51 லட்சம் கார்டுதாரர்களே நிவாரண தொகை வாங்க வேண்டியுள்ளது. சர்க்கரை கார்டுதாரரையும் சேர்த்து மொத்த 2.13 கோடி கார்டுதாரர்களில 20 சதவீதம் பேர் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.

ரேஷன் கடைகளை திறந்து பொருட்களையும், 2,000 ரூபாய் நிவாரண தொகையையும் வழங்கினால், அவற்றை வாங்க கார்டுதாரர்கள் அல்லது அவர்களின் பெயரில் பலரும், வீடுகளை விட்டு வெளியில் வருவர். இதனால், கொரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, 'ரேஷனில், இம்மாதத்திற்கான பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை வாங்காதவர்கள், அவற்றை, அடுத்த மாதம் சேர்த்து வாங்கி கொள்ளலாம்' என, அரசு அறிவித்து, அதை செயல்படுத்தினால், முழு ஊரடங்கை, மக்கள் முழுதுமாக பின்பற்ற முடியும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X