லாட்டரி விற்கணுமாம் அரசு: கார்த்தி ஏடாகூட யோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்கணுமாம் அரசு: கார்த்தி ஏடாகூட யோசனை

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (85)
Share
புதுக்கோட்டை: ''தமிழக அரசின் வருவாயை பெருக்க, மீண்டும் லாட்டரி விற்பனையை துவக்க வேண்டும்,'' என, சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: தடுப்பூசி போடுவது குறித்து, பொதுமக்களிடையே மிகப்பெரிய குழப்பம்,
lottery, Karti Chidambaram, Congress

புதுக்கோட்டை: ''தமிழக அரசின் வருவாயை பெருக்க, மீண்டும் லாட்டரி விற்பனையை துவக்க வேண்டும்,'' என, சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: தடுப்பூசி போடுவது குறித்து, பொதுமக்களிடையே மிகப்பெரிய குழப்பம், தயக்கம் உள்ளது. அதை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள, தடுப்பூசி தான் ஒரே வழி.

தேசிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது. பா.ஜ., தவிர, எந்த கட்சியும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஹிந்தியை வளர்க்க தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழக அரசு வருவாயை பெருக்க, மீண்டும் லாட்டரி விற்பனையை கொண்டு வரவேண்டும். லாட்டரி விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாட்டரி நடத்துவதால், பல குடும்பங்கள் சீரழிகின்றன என்ற, விவாதங்கள் வரும். ஆனால், ஆதார் கார்டு வைத்து, ஒருவருக்கு, 10 டிக்கெட் மட்டுமே என, வரைமுறைப்படுத்த வேண்டும். இதை, தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.இவ்வாறு, கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X