சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மினி வேன் ஏற்றி இளம்பெண் கொலை அமெரிக்க கணவரின் சதி அம்பலம்

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
திருவாரூர்:திருவாரூர் அருகே, மினி வேன் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொலையின் பின்னணியில், அமெரிக்காவில் வசிக்கும் அவரது கணவருக்கு தொடர்புஇருப்பதாக,போலீசார் தெரிவித்தனர்.திருவாரூர் அருகே, கிடாரம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ஜெயபாரதி, 28. இவருக்கு, 2015ல் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, விஷ்ணுபிரகாஷ்,
 மினி வேன் ஏற்றி இளம்பெண் கொலை அமெரிக்க கணவரின் சதி அம்பலம்

திருவாரூர்:திருவாரூர் அருகே, மினி வேன் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொலையின் பின்னணியில், அமெரிக்காவில் வசிக்கும் அவரது கணவருக்கு தொடர்புஇருப்பதாக,போலீசார் தெரிவித்தனர்.

திருவாரூர் அருகே, கிடாரம்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ஜெயபாரதி, 28. இவருக்கு, 2015ல் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, விஷ்ணுபிரகாஷ், 33, என்பவருடன் திருமணம் நடந்தது.


விவாகரத்து 'நோட்டீஸ்'


திருமணம் முடிந்த பின், தம்பதி, அமெரிக்காவில் வசித்தனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன், மனைவி மற்றும் குழந்தையை, மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு விஷ்ணுபிரகாஷ் அனுப்பி விட்டார்.ஜெயபாரதி, ஆந்தக்குடி கிளை தபால் நிலையத்தில், தற்காலிக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன், கணவருக்கு விவாகரத்து, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

விவாகரத்து நோட்டீஸ் குறித்து, தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு தெரிந்தால், வேலை போய்விடும் என பயந்த விஷ்ணுபிரகாஷ், மனைவி வீட்டாரிடம் சமரசம் பேசியுள்ளார். ஆயினும், உடன்பாடு ஏற்படவில்லை.இந்நிலையில், கடந்த 21ம் தேதி மதியம், 2:30 மணிக்கு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில், ஜெயபாரதி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.


நால்வர் கைது

தப்ளாம்புலியூர் கடுவையாற்று பாலத்தில், எதிரே வந்த மினி லோடு வேன் மோதியதில் ஜெயபாரதி படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் இரவு இறந்தார்.திருவாரூர் தாலுகா போலீசார் விபத்து வழக்காக பதிந்து, வேன் டிரைவர் பிரசன்னா, உரிமையாளர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சிதம்பரம், தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக, நேற்று முன்தினம் புகார் அளித்தார். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில், விபத்து ஏற்படுத்திய மினி லோடு வேன், ஜெயபாரதியை பின் தொடர்ந்து வந்து, அவர் மீது மோதியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், விபத்து வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்தனர்.இதற்கு உடந்தையாக இருந்த ராஜா, ஜெகன், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் வசிக்கும் விஷ்ணுபிரகாஷ் ஏற்பாட்டில் இந்த கொலை நடந்திருப்பதாக, போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக, விஷ்ணுபிரகாஷின் உறவினர்களிடம்விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gayathri - coimbatore,இந்தியா
27-மே-202111:41:14 IST Report Abuse
gayathri தனது அறிவுக்கு பட்ட தரம் தாழ்ந்த கருத்துக்களை பதிவிடுவது ஏன் ? நாம் ஒழுங்காக இருக்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்கலாமே. தன குடும்பம் நேர்மையான குடும்பமா என்பதை சிந்தித்து பார்க்கவும். தனிமனித ஒழுக்கம் இருந்தால் குற்றம் நடைப்பெற்றது அதுதானே உண்மை. லஞ்சம் / கொள்ளை அடிப்பவர்கள் / அராஜகம் செய்பவர்கள்/ வாங்குபவர்கள் கூட நல்லவர்கள் போல தலத்தில் பதிவிடுவது வேதனை
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
28-மே-202106:08:30 IST Report Abuse
கௌடில்யன்மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெறுவது நல்லது .....
Rate this:
jagan - Chennai,இலங்கை
28-மே-202118:44:53 IST Report Abuse
jaganகடைசி வரி உங்களுக்கு பொருந்தும் போல...
Rate this:
Cancel
sam - Alaska,யூ.எஸ்.ஏ
26-மே-202121:55:01 IST Report Abuse
sam This is a stupid decision, some people voluntarily invite சனி to the house. He is a great example. I am really feeling sorry for their daughter.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
26-மே-202103:24:58 IST Report Abuse
naadodi That guy from USA took a stupid decision. US employers cannot fire anyone on personal divorce actions. Now he will be fired because of criminal conspiracy. He could have accepted the divorce and moved on.
Rate this:
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
26-மே-202115:45:18 IST Report Abuse
Sivasankar Ayyaduraiஅவன் வேல போயிடும்னு பயந்தான்னு போட்டுருக்கு....
Rate this:
Raj - London,யுனைடெட் கிங்டம்
27-மே-202100:52:04 IST Report Abuse
Rajbut for Domestic violence, the employer, under the guidance of social securityand women and child protection agency can get him sacked....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
27-மே-202106:46:44 IST Report Abuse
Sanny USA வில் குடியேறியது மனைவியின் விசாவின் உதவியுடன் கணவனும் போனால் கணவன் மனைவி பிரிவுவந்தால், விசாவின் மூலபத்திரம் யாரின் பேரில் இருக்கோ அவர், அவர் விவாகரத்து செய்தால் தனது துணைவரின் (கணவன் அல்லது மனைவி) விசாரத்து ஆகலாம், ஆனால் அவருக்கு நிரந்தர வதிவிட விசா அல்லது குடியுரிமை இருந்தால் தப்பிவிடலாம். இந்த மாதிரி ஒரு கொலையும் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் பஞ்சாப்வாசி இந்தியாவில் தனது மனைவியை அனுப்பிவிட்டு ஆட்களை வைத்து கொலைசெய்த கேசும் இன்னும் நடக்குது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X