அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தி.மு.க.,வினர் திடீர் அட்டகாசம்

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (102)
Share
Advertisement
அரசின் முழு ஊரடங்கை சிறிதளவும் மதிக்காமல், 25க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கூட்டமாக வந்து, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று, முதல்வர் படத்தை வைத்து, அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமூக இடைவெளிகொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை குறைக்க, அரசு கடுமையாக போராடி வருகிறது. தொற்று பரவலை குறைக்க, தளர்வில்லா ஊரடங்கு, நேற்று முதல் அமலுக்கு
Corporation,DMK,திமுக,திராவிட முன்னேற்றக் கழகம்,மாநகராட்சி

அரசின் முழு ஊரடங்கை சிறிதளவும் மதிக்காமல், 25க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கூட்டமாக வந்து, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று, முதல்வர் படத்தை வைத்து, அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக இடைவெளிகொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தை குறைக்க, அரசு கடுமையாக போராடி வருகிறது. தொற்று பரவலை குறைக்க, தளர்வில்லா ஊரடங்கு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தளர்வில்லா ஊரடங்கின் முதல் நாளான நேற்று காலை, 25க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், சமூக இடைவெளி இன்றி கூட்டமாக, பெருங்குடி மண்டல அலுவலகம் வந்தனர்.அலுவலக கூட்ட அறையில், முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கோஷமிட்டனர். பின், பல அறைகளை சுற்றி வந்த அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதில், சிலர் முக கவசம் அணியவில்லை.முதல்வரின் உத்தரவை மதிக்காமல், முழு ஊரடங்கு காலத்தில், தி.மு.க.,வினர் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்தது, மண்டல அலுவலக ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு திங்களன்று திமுக நிர்வாகிகள் கூட்டமாக வந்தனர். பலர் மாஸ்க் அணியவில்லை. அலுவலக அறைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டிவிட்டு, வாழ்க கோஷங்களை முழங்கி விட்டுச் சென்றனர். முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மண்டல அலுவலகத்துக்கு வந்து ஸ்டாலின் படத்தை மாட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது தெரியவில்லை. ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என முதல்வர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை திமுக நிர்வாகிகளே மதிக்கவில்லை.

latest tamil news

நல்ல உதாரணம் அல்ல


சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பித்த முதல் நாளில், மண்டல அலுவலகத்தில் முதல்வர் படம் மாட்டுவது அவசியமா? தி.மு.க., ஆட்சியில், முதல்வரின் உத்தரவை, அவரது கட்சியினரே மதிக்காமல், கூட்டமாக வந்து அட்டகாசம் செய்வது நல்ல உதாரணம் அல்ல. இவர்கள் மீது, காவல்துறை வழக்கு பதிய வேண்டும். கட்சி தலைமை யும், தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் கட்சியினர் இனி பொறுப்புடன் நடந்துகொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
29-மே-202113:17:00 IST Report Abuse
sankar நாங்க அப்படித்தான் இருப்போம் நீங்க கம்முனு இருங்க
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
28-மே-202111:57:01 IST Report Abuse
dina முட்டாள் படத்தை வைப்பது பெருந்தொற்றைவிட பெருங்குற்றம் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-மே-202110:41:58 IST Report Abuse
sankaseshan முன்னாள் முதல்வர் படத்தை அகற்ற திமுக கிருமிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X