சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை: 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : மே 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நாகர்கோவில்: பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து மனைவியை கணவனே கொலை செய்த வழக்கில், கணவர், அவரது குடும்பத்தினர் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். மனைவி உத்ரா 25. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்தது. இதற்கு சிகிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக்
பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை: 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

நாகர்கோவில்: பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து மனைவியை கணவனே கொலை செய்த வழக்கில், கணவர், அவரது குடும்பத்தினர் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். மனைவி உத்ரா 25. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கணவர் வீட்டில் உத்ராவை பாம்பு கடித்தது. இதற்கு சிகிச்சை பெற்ற பின்னர் தாய் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது 2020 மே 6ல் மீண்டும் உத்ராவை பாம்பு கடித்ததில் இறந்தார். அறையில் இருந்த பாம்பை உறவினர்கள் அடித்து கொன்றனர்.

முதலில் சாதாரணமாக பாம்பு கடி என்று கருதப்பட்டது பின்னர் கொலை சம்பவமாக மாறியது. உத்ரா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சூரஜ் பெற்றோரிடம் இதை சொல்லி மூன்றை ஏக்கர் நிலம், 100 பவுன் நகை, கார், 10 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். நகை பணத்தை செலவு செய்த சூரஜ் மேலும் பணம் கேட்டு உத்ராவை கொடுமைப்படுத்தினார்.

உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தார். முதல் முயற்சி தோல்வி அடைந்து. இரண்டாவது முயற்சியில் உத்ரா இறந்தார். சூரஜ் கைது செய்யப்பட்டார். பாம்பை கொடுத்தவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இவ்வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை கொல்லம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அசோகன் தாக்கல் செய்துள்ளார். அதில் சூரஜ்ஜின் தந்தை சுரேந்திரன், தாய் ரேணுகா, சகோதரி சூரியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 200 பக்கமுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் வீட்டு கொடுமை, நம்பிக்கை துரோகம், தடயங்ளை அழித்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
26-மே-202118:30:10 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இது போல ஓரிரு செய்திகள் வந்துள்ளன மிகக் கொடிய பாவம்
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-202112:45:21 IST Report Abuse
Ramesh R என்ன கொடுமை சரவணா
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நல்லாருக்கு
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
26-மே-202118:28:55 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஉங்க மனசுக்கு அப்படியா தோணுது ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X