ஆன்டிகுவாவில் மெஹூல் சோக்சி மாயம்: கியூபாவிற்கு ஓட்டம்?

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
மும்பை: வங்கி மோசடி வழக்கில் ஆன்டிகுவாவில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி மெஹூல் சோக்சி அங்கிருந்து கியூபாவிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.மும்பையை தலைமையிடமாக வைத்து, 'கீதாஞ்சலி' என்ற வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வஙங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால்,

மும்பை: வங்கி மோசடி வழக்கில் ஆன்டிகுவாவில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி மெஹூல் சோக்சி அங்கிருந்து கியூபாவிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.latest tamil newsமும்பையை தலைமையிடமாக வைத்து, 'கீதாஞ்சலி' என்ற வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வஙங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால், மேற்கிந்திய தீவான, ஆன்டிகுவாவுக்கு, சோக்சி தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க தேவையான ஒத்துழைப்பை அளிப்பதாக ஆன்டிகுவாவும் தெரிவித்திருந்தது.


latest tamil newsஇந்நிலையில், மெஹூல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை ஆன்டிகுவா அரசு எடுத்து வந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஞாயிறு அன்று, உணவகத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அங்கு, வெறும் கார் மட்டும் காணப்பட்டது. அவர் மாயமானதாக கூறப்படும் தகவலை தொடர்ந்து, அந்நாட்டு போலீசார் சோக்சியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


latest tamil newsஇதனிடையே, மெஹூல் சோக்சி கியூபாவிற்கு தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக, கியூபாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏதும் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
25-மே-202123:23:29 IST Report Abuse
அன்பு பிடிக்க மனமிருந்தால், இந்திய அரசு இவரை இந்நேரம் பிடித்து இழுத்துட்டு வந்திருக்கும்.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
25-மே-202118:43:11 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இத்தாலிய ஆயுத இடைத்தரகர் ஒட்டாவியோ குவாத்ராவ்ச்சி என்பவன் எப்படி, இந்திய அரசாங்கத்திடம் கடைசி வரை பிடிபடவில்லையோ ( அவனை எப்படி அந்நாளைய காங்கிரஸ் அரசு பிடிக்கவே இல்லையோ ) அது போலத்தான் இதுவும்... ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதி தாவூத் இப்ராஹீமை பிடித்ததா ? அது போலத்தான் இதுவும்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மே-202122:27:13 IST Report Abuse
தமிழவேல் 22 பேரோட ஒரேசமயத்தில் போன நித்தியையே கோட்டை விட்டுட்டோம் பாரு......
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
26-மே-202103:13:51 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅப்போ வித்த்தியாசமே இல்லைங்குற.....
Rate this:
Cancel
25-மே-202118:00:46 IST Report Abuse
ஆப்பு கைலாசாவுக்குப் போகலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X