அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு: கல்வி அமைச்சர்

Updated : மே 25, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை: பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார்
AnbilMahesh, Education Minister, Tamilnadu

சென்னை: பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும். ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் வெளியிட இருக்கிறது.


latest tamil news


மாநிலப் பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்படும். ஏற்கனவே பள்ளிகளில் 'விசாகா கமிட்டி' உள்ளது. பெண் ஆசிரியர் ஒருவர் இதற்கு தலைமை வகிப்பார். விசாகா கமிட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளதா, செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இனி பிரச்னை வராமல் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயாராக உள்ளது. முதல்வர் ஒப்புதலுக்குப் பின்னர் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
26-மே-202121:33:26 IST Report Abuse
BASKAR TETCHANA சன் தி.வி. கதை எல்லாம் தனி அறையில் நடப்பது. அது ஸ்டாலினுக்கு மட்டுமே தெரியும்.
Rate this:
Cancel
26-மே-202108:55:03 IST Report Abuse
Thiagarajan V 0 /////
Rate this:
Cancel
Umashankar Jay - chennia,யூ.எஸ்.ஏ
26-மே-202108:06:10 IST Report Abuse
Umashankar Jay அமைச்சர் மகேஷ் அவர்களுக்கு கொடுத்த முதல் assignment ஓவர் . அடுத்து எந்த பள்ளி . டி ஏ வி .. ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X