பொது செய்தி

இந்தியா

கட்டுப்பாடுகளை ஏற்க 'பேஸ்புக்' நிறுவனம் சம்மதம்

Updated : மே 27, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :'மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவதே எங்கள் நோக்கம். சில விஷயங்கள் குறித்து, தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இது குறித்து கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது' என, 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதுடன்,
கட்டுப்பாடுகள்,'பேஸ்புக்  நிறுவனம் சம்மதம்

புதுடில்லி :'மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவதே எங்கள் நோக்கம். சில
விஷயங்கள் குறித்து, தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இது குறித்து கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது' என, 'பேஸ்புக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதுடன், வெறுப்புணர்வை துாண்டும் பொய்யான பிரசாரங்களால் வன்முறைகளை துாண்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.


'ஆன்லைன்'



இதையடுத்து சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒழுங்குமுறை விதிகளை வகுத்து, மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. ஓ.டி.டி., எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வரும், 'நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்' போன்ற தளங்களுக்கும் மத்திய அரசு விதிகளை வகுத்து அறிவித்தது.
அந்த விதிகளில் கூறப்பட்டிருந்ததாவது:

சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களில் சர்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை, 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் சமூக வலைதள நிறுவனங்கள், இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அவதுாறான செய்தியை முதலில் பரப்பும் நபரை, சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். நீதிமன்றங்களுக்கும், அரசுக்கும் அந்த பயனரின் தகவல்களை வழங்க வேண்டும்.




நடவடிக்கை



இந்த புதிய கட்டுப்பாடுகள், மே 26 முதல் அமலுக்கு வரும். விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இதனால் விதிகளுக்கு கட்டுப்படாத பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் குறித்து, பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று கூறியதாவது:மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவதே எங்கள் நோக்கம். சில விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இந்த விஷயங்கள் குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.


நடைமுறை



தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதுடன், செயல்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் செயல் திறனை மேம்படுத்துதல் தொடர்பாக, நாங்கள் பணியாற்றி வருகிறோம். மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்துவதில் பேஸ்புக் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
26-மே-202113:20:24 IST Report Abuse
sankar எதுக்கு பிரச்சினை - தடை செய்து விடுங்கள் - சமுதாய, கலாசார சீரழிவு தடுக்கப்படும்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-மே-202112:57:11 IST Report Abuse
pradeesh parthasarathy ஏற்கனவே பத்திரிகைகள் மத்திய அரசின் தவறுகளை வெளிக்கொண்டு வராமல் முழுங்கடிக்கின்றன ... இந்நிலையில் சமூக ஊடகங்களை மிரட்டி பணிய வைக்கும்போது அரசின் தவறுகள் வெளியே தெரியாமல் முழுவதும் இருட்டடிக்கப்பட்டுவிடும் ....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
26-மே-202107:38:36 IST Report Abuse
blocked user நாட்டுக்கு பயனில்லாத இது போன்ற சமூக ஊடகங்களை சீனா போல தடை செய்தால்க்கூட தப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X