பொது செய்தி

இந்தியா

பாலியல் தொல்லை: 'போக்சோ'வில் ஆசிரியர் கைது

Updated : மே 27, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (103+ 29)
Share
Advertisement
சென்னை :சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆய்வுசென்னை, கே.கே.நகரில்உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளின் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், 59, பாலியல் தொல்லை அளித்ததாக, நேற்று முன்தினம் புகார் எழுந்தது.'ஆன்லைன்'
பாலியல் தொல்லை ,போக்சோ,ஆசிரியர் கைது ,

சென்னை :சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


ஆய்வுசென்னை, கே.கே.நகரில்உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளின் மாணவியர் சிலருக்கு, அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், 59, பாலியல் தொல்லை அளித்ததாக, நேற்று முன்தினம் புகார் எழுந்தது.'ஆன்லைன்' வகுப்பின் போது, 'வாட்ஸ் -ஆப்' வாயிலாக மாணவியருக்கு, ஆபாச தகவல்கள் அனுப்பியதாகவும், மொபைல் போனில் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.


விசாரணைதொடர்ந்து நங்கநல்லுார், ஹிந்து காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ராஜகோபாலனை, போலீசார் கைது செய்து, வடபழநி காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரித்தனர்.அவரது மொபைல் போன், மடிக்கணினி ஆகியவற்றையும் ஆய்வு செய்த போலீசார், அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப்பெறும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர் விசாரணையில், தன்னிடம் படித்த முன்னாள், இந்நாள் மாணவியருக்கு, ராஜகோபாலன் ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. ஆன்லைனில் இருக்கும் மாணவியரை, 'வாட்ஸ் ஆப்'பில், தொடர்பு கொள்ளும் ராஜகோபாலன், முதலில் அழகை பற்றி வர்ணிப்பது பின், அணிந்து இருக்கும் உடை குறித்து கேட்பது என, சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.சில மாணவியரிடம், அந்தரங்க படங்கள் கேட்டதும், வீடியோ காலில் பேசும் போது, அரை நிர்வாணத்துடன் தோன்றி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்து உள்ளது.


கைதுஇதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின்படி, 'போக்சோ' உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர். பின், மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர். பள்ளியில் இருந்தும் ராஜகோபாலன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


புகார்இதற்கிடையில், ராஜகோபாலன் மீது முன்னாள், இந்நாள் மாணவியர் என, 25 பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் மொபைல் போன் எண் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.இவர்களில், சென்னையை சேர்ந்தவர்கள், 10 பேர். இந்த புகார்கள் குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


டி.ஜி.பி.,க்கு ஆணையம் கடிதம்பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, தமிழக டி.ஜி.பி., திரிபாதிக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள, பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவியருக்கு, இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து, ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரித்து இருப்பதாகவும் அறிகிறோம். மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட குற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்த கடிதம் கண்ட மூன்று தினங்களில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


மூடி மறைப்பா?சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லுாரிக்கு எதிரே, புனித ஜார்ஜ் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக, எபி ஜார்ஜ் என்பவர்பணிபுரிகிறார். இவர், மாணவியர் விடுதி காப்பாளராகவும் உள்ளார்.இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும்
புகார் தரப்பட்டது. பின், பல கட்டங்களில் பேச்சு நடந்து, இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரும், கல்வித்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


'சஸ்பெண்ட்' போதாது: குஷ்பு கடும் கோபம்''பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்தால் மட்டும் போதாது,'' என, நடிகை குஷ்பு கூறியுள்ளார்.சென்னையில், மாணவியரிடம், பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து, பா.ஜ., நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளதாவது:பள்ளி விவகாரம் தொடர்பானசெய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த ஆசிரியரை வெறும், 'சஸ்பெண்ட்' செய்தால் மட்டும் போதாது. உடனடியாக, அவரிடம் உரிய விசாரணை செய்து, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் பயத்துடனே,
பள்ளிக்கு செல்ல முடியாது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பார் என, நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (103+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-மே-202121:43:08 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மதம் சார்ந்து சினிமா அரசுத்துறை பள்ளி நீதித்துறை செயல் படாமல் இருக்க வேண்டும் அனைவருக்கும் ஒரே நீதியாக இருக்க வேண்டும் . தவறு செய்தவன் இந்துவாக இருந்தாலும் கெட்டவன் தான்.
Rate this:
Cancel
Ravi Shankar - Chennai,இந்தியா
27-மே-202120:01:44 IST Report Abuse
Ravi Shankar வெட்கம். வேதனை. ஒரு பிஞ்சை அதனறியாமல் நஞ்சாக்கும் கொடியவர்கள் எல்லாம் கற்று தரும் ஆசான் என்று போர்வையில் சுற்றி திரியும் உலகத்தில், வெளி வந்த ஒரு நஞ்சு கொடியும் கத்தரிக்க முடியாமல், இது இந்து நஞ்சு, கிறிஸ்டின் நஞ்சு என்னாச்சு என்ற ரீதியில் பேசுவது மனு தர்மம் அல்ல. ஒரு நிமிடம், அந்த பெண் பிள்ளையின் மனதை நினைத்து பார்த்தால் தெரியும். ஆன்லைனில் வாத்திமார் தொல்லை, மற்ற நேரங்களில் படிக்கவில்லையென பெற்றோர் தொல்லை. தனக்கு நேர்ந்த வன்முறையை கூட யாரிடமும் சொல்லிவிட முடியாத புழுக்கத்தில் இன்னும் எத்துணை பெண் குழந்தைகள் அவதி படுகிறார்கள் என்று தெரியவில்லை. வெளியில் சொன்ன கெளரவம் போய் விடும் என்று எண்ணத்திலேயே பல வன்முறை நிகழ்வுகள் புதைக்கப்படுகின்றன. தைர்யமாக சொல்லுபவர்கள் பிரைவசி பாதுகாக்கப்படவேண்டும். அப்படி செய்வதில் மீடியாவிற்கும் காவல் துறைக்கும் பெரும் பங்கு உண்டு. பிரேக்கிங் நியூஸ் பசிக்கு இவர்களை உட்கொள்ளக்கூடாது.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
27-மே-202113:09:48 IST Report Abuse
தஞ்சை மன்னர் """ சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லுாரிக்கு எதிரே, புனித ஜார்ஜ் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக, எபி ஜார்ஜ் என்பவர்பணிபுரிகிறார். இவர், மாணவியர் விடுதி காப்பாளராகவும் உள்ளார்.இவர் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது""" அப்போ பத்ம சேஷாஸ்ரீ பள்ளி கேஷையும் எங்காவது மரத்தடியில் வைத்து பஞ்சாயத்து செய்து முடித்து கொள்ளுவோம ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X