பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்களை அதிகம் பலிவாங்கும் கொரோனா 2வது அலை

Updated : மே 27, 2021 | Added : மே 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை :கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரத்தால் திடீர் திடீரென இளைஞர்கள் உயிரிழந்து வருவது டாக்டர்களை பதற வைத்துள்ளது. 'இளைஞர்களே உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்; வீட்டு உணவை மட்டும் சாப்பிட்டு பழகுங்கள். காய்ச்சல் சளி இருந்தால் உடனே பரிசோதியுங்கள்; தாமதப்படுத்தினால் உயிரை காப்பாற்றுவது சிரமம்' என கொரோனா நோயாளிகளுடன் தினமும் போராடி வரும் டாக்டர்கள்
 இளைஞர்கள், அதிகம் பலி,கொரோனா ௨வது அலை

சென்னை :கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரத்தால் திடீர் திடீரென இளைஞர்கள் உயிரிழந்து வருவது டாக்டர்களை பதற வைத்துள்ளது. 'இளைஞர்களே உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்; வீட்டு உணவை மட்டும் சாப்பிட்டு பழகுங்கள். காய்ச்சல் சளி இருந்தால் உடனே பரிசோதியுங்கள்; தாமதப்படுத்தினால் உயிரை காப்பாற்றுவது சிரமம்' என கொரோனா நோயாளிகளுடன் தினமும் போராடி வரும் டாக்டர்கள் கெஞ்சுகின்றனர்.


பாதிப்பு

தமிழகத்தில் 2020 மார்ச் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை கொரோனா தொற்று முதல் அலையின் பாதிப்பு இருந்தது. அதில் 8.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்; 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றின் இரண்டாம் அலை இந்தாண்டு மார்ச் முதல் பரவத் துவங்கியது. முதல் அலை போல அல்லாமல் பல மடங்கு தீவிரம் காட்டுவதால் பாதிப்பு எதிர்பார்க்காத வகையில் எகிறி வருகிறது.

தொற்றுக்கு மூன்று மாதங்களில் மட்டும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 8500 பேர் இறந்துள்ளனர். முதல் அலையின் போது தொற்று பாதிப்புக்கு இளைஞர்கள் ஆளாவது 10 சதவீதத்திற்கு கீழும்; இறப்பு 2 சதவீதத்திற்கு குறைவாகவும் இருந்தது.இரண்டாம் அலையில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்படுவது ௨௦ சதவீதமாகவும் இறப்பு 7 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதுவும் பாதிப்பு கண்டறிந்த சில நாட்களிலேயே திடீர் திடீரென இளைஞர்கள் இறப்பது உறவினர்களை மட்டுமல்ல டாக்டர்களையும் பதற வைத்துள்ளது.என்ன காரணம்பொதுவாக இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் உடல் உபாதைகள் இருக்காது. ஒரு வாரம் கடந்த பிறகே தொற்று பாதித்துள்ளதை அறிய முடிகிறது. அதன்பின் சுதாரிப்பதற்குள் நுரையீரல் வரை கடுமையாக பாதித்துள்ள தொற்று உயிரை பலி வாங்கி விடுகின்றனர் என்கின்றனர் டாக்டர்கள்.கொரோனா தொற்றுக்கு தற்போது இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால் அவர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஓட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டு உணவை மட்டும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.எனவே லேசான அறிகுறி இருந்தாலும் தாமதிக்காமல் டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறுவதன் வாயிலாக உயிரை காப்பாற்றி கொள்ள முடியும்; அலட்சியம் வேண்டாம் என மருத்துவமனைகளில் தினமும் கொரோனா நோயாளிகளுடன் போராடி வரும் டாக்டர்கள் இளைஞர்களுக்கு கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதா வது: பொதுவாக எந்த நோய் பரவலாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதினரை முதலில் தாக்கும். அதை கட்டுப்படுத்தினால் முதலில் தாக்கியவர்களை விட வயது குறைவானர்கள் மற்றும் வயது அதிகமானவர்களுக்கு தொற்று பரவும்.அதுபோலவே கொரோனா தொற்று பாதிப்பும். முதலில் வயதானவர்களை தாக்கியது. அவர்களில் பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். பலர் தடுப்பூசி போட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் யாருடைய உடம்பிலாவது இருக்கவே செய்யும். எனவே தற்போது இளைஞர்களை பாதிக்கிறது.

பொதுவாக 100 இளைஞர்களில் ஐந்து இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது.மேலும் இளைஞர்களிடம் புகைப்பழக்கமும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் புகைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் விரைவில் உயிரிழப்பு ஏற்படுகிறது.எனவே அனைத்து வயதினரும் பாதுகாப்புடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும். தடுப்பூசி போட வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்ப்பதும் நல்லது.இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krush - Pallavaram, Chennai,இந்தியா
26-மே-202111:31:40 IST Report Abuse
Krush நல்ல பதிவு..
Rate this:
Cancel
26-மே-202107:57:49 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசி போட்டுக்க முன்வந்தவங்களை துரத்தி உட்டு, வயசானவங்களுக்கு முதலில் போடறேன் பேர்வழின்னு தடுப்பூசிகளை வீணாக்கிட்டு இன்னிக்கி மாநில அரசுகளை குத்தம் சொல்லியே நாட்களை ஓட்டிக்கிட்டிருக்குது மத்திய அரசு. இப்பவும் ஒண்ணும் குடிமுழுகலை. ஆப், முன்பதிவு புண்ணாக்கையெல்லாம் தூக்கி வெச்சுட்டு வர்ரவனுக்கு தடுப்பூசி போடுங்க.
Rate this:
RIN - ,
26-மே-202115:21:37 IST Report Abuse
RINIf no registration and open up the vaccine for everyone then who will control the crowd....
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
26-மே-202119:40:24 IST Report Abuse
கல்யாணராமன் சு.வயசானவங்க மேல உங்களுக்கு என்ன அவ்வளவு காண்டு ?? அவங்களும் மனுஷங்கதானே ??...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
26-மே-202101:47:45 IST Report Abuse
அசோக்ராஜ் நாங்க பீஸா, பர்கர், கோக், விஸ்கி, லிவிங் டுகெதர் தலைமுறை. எங்களுக்கு அதி விரைவில் நோய் எதிர்ப்புச் சக்தி வர மாதிரி மருந்து கண்டுபிடிங்களேண். அதை விட்டுட்டு அட்வைஸ் ஆரம்பிச்சுட்டீங்க. நாங்க என்ன சாப்பிடணும்னு தீர்மானிக்கறது எங்க உரிமை. இஞ்சி மஞ்சள் னு எதையாவது கொண்டாந்தீங்க கெட்ட கோபம் வந்துடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X