அரசியல் செய்தி

தமிழ்நாடு

'செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை துவக்க வேண்டும்' ; முதல்வர் ஸ்டாலின்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
செங்கல்பட்டு : ''செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின், எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனத்தில், தடுப்பூசி தயாரிப்பை விரைந்து துவக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில், மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் அருகில், 100 ஏக்கர் பரப்பில், மத்திய அரசின், எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனம்

செங்கல்பட்டு : ''செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின், எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனத்தில், தடுப்பூசி தயாரிப்பை விரைந்து துவக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.



latest tamil news


வீணாய் போன தடுப்பூசி கம்பெனியில் ஸ்டாலின் ஆய்வு! செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.



செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில், மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் அருகில், 100 ஏக்கர் பரப்பில், மத்திய அரசின், எச்.எல்.எல்., பயோடெக் நிறுவனம் சார்பில், குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மையம் அமைப்பது, 2013ல் துவங்கி, 2017ல் முடிந்தது. இவ்வளாகம் உருவாகி, நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் தடுப்பூசி தயாரிப்பு துவக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த வளாகத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று ஆய்வு செய்தார்.


latest tamil news



அதன்பின் அவர் கூறியதாவது : கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. எனவே, தேவையான நிதி ஒதுக்கி, இந்த, எச்.எல்.எல்., நிறுவனத்தை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை உடனே தொடங்க, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்கும். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
26-மே-202114:44:18 IST Report Abuse
P Sundaramurthy தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு இந்த இந்த வளாகத்தை மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் அவர்களிடம் ஒப்படைத்து, அதன் பலனாக குறைந்த விலையில் தடுப்பூசி அரசு பெற்றுக்கொள்ளலாம் . உற்பத்தியை விரைவில் தொடங்க இது ஒரு வாய்ப்பு . யாரும் முன்வராத பட்சத்தில் தமிழக அரசே இதை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று உற்பத்தியை தொடங்கலாம் .
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
26-மே-202114:30:01 IST Report Abuse
siriyaar அந்த எய்மஸ் செங்கல் வைத்து எல்லாம் ஊசி தயாரிக்க முடியாது. மத்திய அரசுக்கு செங்கல் என்றால் அந்த நாபம்தான் வரும்.
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
26-மே-202111:25:29 IST Report Abuse
Dr. Suriya சுயமரியாதை, தன்மானம் உள்ள மாநில அரசே செய்யலாமே இதை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X