சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருடு போனதாக போலீஸ்காரர் மனைவி நாடகம்

Added : மே 26, 2021
Share
Advertisement
திருமுல்லைவாயில் : கொரோனா பரிசோதனை செய்வது போல் வந்து, 5.5 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, போலீஸ்காரரின் மனைவி நாடகமாடியது அம்பலமானது.ஆவடி, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், 27; ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர்.இவர் மனைவி சந்திரலேகா, 24. தர்மராஜ், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணியளவில்

திருமுல்லைவாயில் : கொரோனா பரிசோதனை செய்வது போல் வந்து, 5.5 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, போலீஸ்காரரின் மனைவி நாடகமாடியது அம்பலமானது.

ஆவடி, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், 27; ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர்.இவர் மனைவி சந்திரலேகா, 24. தர்மராஜ், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணியளவில் வேலைக்கு சென்றார்.அவர் சென்ற சிறிது நேரத்தில், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, இருவர் வந்ததாகவும், அவர்கள் தனக்கு மயக்க மருத்து கொடுத்து, 5.5 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதாகவும், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில், சந்திரலேகா புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், அவர் கழுத்தில் இருந்த நகை திருடு போகாததால், சந்தேகமடைந்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரித்ததில், கணவருக்கு தெரியாமல் உறவினர் ஒருவருக்கு கொடுத்த நகை, திரும்ப கிடைக்காததால், நகை திருடு போனதாக நாடகமாடியது தெரிந்தது. சந்திரலேகாவிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X