சித்தராமையா மீது காங்., - எம்.எல்.ஏ.,வின் குரு பக்தி

Added : மே 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது, காங்., - எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான் காண்பிக்கும், அதிகமான குரு பக்தி, கட்சி மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பதால், அரசுடன் எதிர்க்கட்சியான காங்கிரசும் கை கோர்க்க வேண்டும். கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் ஏழைகளுக்கு பயனுள்ள வகையில், பணியாற்ற வேண்டும் என அக்கட்சி மேலிடம்
சித்தராமையா மீது காங்., - எம்.எல்.ஏ.,வின் குரு பக்தி

பெங்களூரு : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மீது, காங்., - எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான் காண்பிக்கும், அதிகமான குரு பக்தி, கட்சி மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பதால், அரசுடன் எதிர்க்கட்சியான காங்கிரசும் கை கோர்க்க வேண்டும். கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள் ஏழைகளுக்கு பயனுள்ள வகையில், பணியாற்ற வேண்டும் என அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி ஏற்பாடு செய்யும் எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்கள், அந்த நிகழ்ச்சிகளுக்க எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் சிவகுமாரை அழைக்கின்றனர்.

சமீபத்தில் கோலார், பசவனகுடியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும், இவ்விரு தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.ஆனால் சாம்ராஜ்பேட்டில் நடந்த, கொரோனா மருத்துவமனை திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை மட்டும், தொகுதி எம்.எல்.ஏ., ஜமிர் அகமது கான் அழைத்திருந்தார். இதனால் மாநில தலைவர் சிவகுமார் வருத்தமடைந்தார்.காங்., - எம்.எல்.ஏ., க்கள், அவரவர் தொகுதிகளில், கொரோனா தொடர்பாக என்னென்ன நற்பணிகள் செய்துள்ளனர் என்பதை, தெரிந்து கொள்வதற்காக, மாநில பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா, சமீபத்தில் பெங்களூரில் கூட்டம் நடத்தினார்.

அக்கூட்டத்தில் பங்கேற்ற ஜமிர் அகமதுகான், ''சித்தராமையா தான் எங்கள் தலைவர். அடுத்த முறை அவர் முதல்வராக வேண்டும் என, நான் விரும்புகிறேன்,'' என மீண்டும், மீண்டும் கூறினார்.இதனால் கடுப்படைந்த சிவகுமார், ''யாரை முதல்வராக்குவது என்பது பற்றி, எம்.எல்.ஏ.,க்கள் குழு முடிவு செய்யும்,'' என்றார்.

அப்போது, சித்தராமையாவுக்கு மட்டும், ஜமிர் முக்கியத்துவம் தருவதை உணர்ந்த சுர்ஜிவாலா, ''சாம்ராஜ்பேட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில தலைவரை, ஏன் அழைக்கவில்லை.இனி போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்,'' என, ஆவேசமாக கேட்டார். இதனால் ஜமிர் தர்மசங்கடத்துக்கு ஆளானார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-மே-202113:21:10 IST Report Abuse
kulandhai Kannan இந்த ஜமீர் அகமது கான், சில காலம் முன்புவரை H.D. குமாரசாமிக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X