இந்தக் கசப்பு மருந்தை பழனிசாமி கொடுத்தபோது குய்யோ முய்யோ என்று குதித்தீர்களே...

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
முழு ஊரடங்கு கசப்பு மாத்திரை தான். ஆனாலும், காலத்தின் தேவையாய் இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் நலனும், பாதுகாப்புமே முக்கியம்; அவையே முன்னுரிமை பெறும். முதல்வர் தலைமையில் இத்தகைய இடர்ப்பாடுகளில் இருந்து மீண்டெழுவோம்.- தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு'இந்த கசப்பு மருந்தை, இ.பி.எஸ்., அரசு கொடுத்த போது, குய்யோ முய்யோ என குதித்தீர்களே...' எனக்
இந்தக் கசப்பு மருந்தை பழனிசாமி கொடுத்தபோது குய்யோ முய்யோ என்று குதித்தீர்களே...

முழு ஊரடங்கு கசப்பு மாத்திரை தான். ஆனாலும், காலத்தின் தேவையாய் இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் நலனும், பாதுகாப்புமே முக்கியம்; அவையே முன்னுரிமை பெறும். முதல்வர் தலைமையில் இத்தகைய இடர்ப்பாடுகளில் இருந்து மீண்டெழுவோம்.
- தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு


'இந்த கசப்பு மருந்தை, இ.பி.எஸ்., அரசு கொடுத்த போது, குய்யோ முய்யோ என குதித்தீர்களே...' எனக் கேட்க தோன்றும் வகையில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.



உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அலோபதி மருத்துவர்களை அவதுாறாக பேசிய, பாபா ராம்தேவ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'அலோபதி மருத்துவர்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா அல்லது ராம்தேவுக்கு எதிராக குரல் கொடுக்கிறீர்களா; சொல்லுங்கள்...' எனக் கிண்டலாக கேட்க தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை, 2017ல் 5,000 ரூபாய் என உயர்த்திய ஜெ., அரசு, 1.63 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கியது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 8,000 ரூபாய் கொடுப்பதாக இருந்தது. ஆனால், தற்போது கொடுத்துள்ளது, 5,000 ரூபாய் மட்டுமே. இது தான், சொல்வதை தான் செய்வோம் என்பதா?
- முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்


latest tamil news




'தி.மு.க.,வினரும், அதிகாரிகளும், மீனவர் நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்கின்றனரே... அப்போ, அதுவும் தவறு தானா...' எனக் கேட்க தோன்றும் வகையில், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை.



தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ.,வின் நான்கு வேட்பாளர்களும், அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றுள்ளோம். கட்சிக்கு இன்னும் அதிக எம்.எல்.ஏ.,க்கள் கிடைக்க நாங்கள் நான்கு பேரும் உழைப்போம். தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. அதை அதிகரிக்க முயற்சிப்போம்.
- பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்


'மலர்ந்த தாமரையை துவண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, உங்கள் நால்வருக்கு தான் உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.



தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி மலர வேண்டும்; கட்சியும் வளர வேண்டும் என்பதற்காக தான், குறுக்கே நிற்க விரும்பாமல் சசிகலா ஒதுங்கியுள்ளார். எனவே, அவருடன் இனியும் பகைமை பாராட்ட தேவையில்லை.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


'அப்படி வாங்க வழிக்கு... இதைத் தான், தேர்தலுக்கு முன்பே சொல்லி வருகிறீர்கள். சசிகலாவை கட்சியில் சேர்க்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே...' எனக் கூற தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-மே-202106:15:00 IST Report Abuse
meenakshisundaram நாங்க அப்படிதான் கத்துவோம் ஏனென்றால் எங்கல்ட்டே 'துட்டு 'இருக்கு ,நாங்க செய்ரது -வெறுப்பு மற்றும் பொழுது அரசியல் தானே ?என்ன மக்களே ,புரிந்ததா ? வரட்டா ?
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
27-மே-202104:50:58 IST Report Abuse
Nepolian S அந்த பள்ளி பாலியல் விவகாரம் குறித்து செய்தி இல்லையா...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-மே-202120:00:14 IST Report Abuse
RajanRajan அப்போ ஆத்தினது வேற திராவிட டி, இப்போ ஆத்துறது முதல்வர் வழிகாட்டுதலில் இஞ்சி டி ஆத்துறானுங்க. எதுக்குப்பா இந்த ஆட தெரியாதவ கேசு மாதிரி கோலம் போடுறீங்க. முடியல்லேன்னா வேற வேலைக்கு போவுறது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X