பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி வீணடிப்பதில் தமிழகம் 3ம் இடம்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: நாடு முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு மருந்து
Tamilnadu, CovidVaccine, Wastage, India, தமிழகம்,கொரோனா, தடுப்பூசி, வீண்,

சென்னை: நாடு முழுவதும் அதிக அளவில் கொரேனாா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 15.5 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில், கடந்த மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு தடுப்பு மருந்து குப்பியை திறக்கும்பட்சத்தில் 10 பேருக்கு அதனை செலுத்த முடியும். ஒரு குப்பியை திறந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கு செலுத்தவில்லை எனில், மீதமுள்ள மருந்து வீணாகி பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த வகையில் அதிகளவு தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.


latest tamil news


இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்க மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பல மாநிலங்கள் அதிகளவு வீணாக்குகின்றன. நாடு முழுவதும் 6.3 சதவீத தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலம் 37.3 சதவீத தடுப்பூசிகளை வீணடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு இடங்களில் சட்டீஸ்கர் ( 30.2 சதவீதம்), தமிழகம் (15.5 சதவீதம்), ஜம்மு - காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் அதிகமாக தடுப்பூசிகளை வீணடித்துள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
26-மே-202121:20:56 IST Report Abuse
raghavan தடுப்பூசி முகாம் நடக்கும் தூரத்தில் இருந்தால்தானே போட்டுக்கொள்ள முடியும். ஊரடங்கால் வண்டியில் போக முடியாது. நிறைய வீணாகத்தான் போகும் எல்லாம் நம் வரிப்பணம்தான் புகழ் சொல்வது போல ஓசியெல்லாம் கிடையாது.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
26-மே-202119:36:33 IST Report Abuse
SKANDH தனியார் மருத்துவ மனைக்கு விற்று பணம் பார்த்திருப்பங்களோ? மாசுவுக்கே வெளிச்சம்.இதுக்கு தனி ஆடிட் பண்ணனும் CAG
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மே-202119:22:42 IST Report Abuse
Pugazh V 1. அரசு இலவசமாக போடும் போது எவனாவது தனியார் மருத்துவ மனைகளுக்குச் சென்று 200, 300 கொடுத்து போட்டுக்குவானா? 2. இலவசமாக கிடைக்கும் ஒரு மருந்தை யாராவது ப்ளாக்கில் வாங்குவார்களா? வாங்கி என்ன பண்ணப் போகிறார்கள். 3. ப்ளாக்கில் 400 க்கு வாங்கி... வா நான் தடுப்பூசி 500 க்கு போடறேன் னு கூப்பிட்டா எந்த மடைன் போவான்?? 4. கடந்த ஆட்சியில் வேஸ்ட் பண்றதுல முதலிடத்தில் இருந்த தமிழகம் மூணாவது இடத்திற்கு முன்னைறி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X