மத்திய அரசின் புதிய சட்டவிதிகள்: ஏற்க மறுத்து நீதிமன்றத்தை நாடியது வாட்ஸ்ஆப் நிர்வாகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மத்திய அரசின் புதிய சட்டவிதிகள்: ஏற்க மறுத்து நீதிமன்றத்தை நாடியது வாட்ஸ்ஆப் நிர்வாகம்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (21)
Share
புதுடில்லி: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய சட்டவிதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. சமூக ஊடகங்களான 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்' போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர்

புதுடில்லி: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு விதித்த புதிய சட்டவிதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.



latest tamil news



சமூக ஊடகங்களான 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்' போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்., 25ம் தேதி வெளியிட்டது.


latest tamil news



இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. 'விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அவகாசம் நேற்று (மே 25) நிறைவடைந்தது. இதையடுத்து, 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்று முதல் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன.


latest tamil news



இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி, மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. 'புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது' என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X