அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: துரைமுருகன்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை: மேகதாதுவில், கர்நாடக அணை கட்ட தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.கர்நாடக மாநிலம் மேகதாது அருகே, பெங்களூரு நகருக்கு, குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக, 9,000 கோடி ரூபாய் செலவில், அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து, 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளது.இதற்கு,
மேகதாது, கர்நாடகா, தமிழகம், துரைமுருகன், அணை,

சென்னை: மேகதாதுவில், கர்நாடக அணை கட்ட தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாது அருகே, பெங்களூரு நகருக்கு, குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக, 9,000 கோடி ரூபாய் செலவில், அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து, 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் உள்ளது.இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது; வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றியும், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படியும் எந்த அனுமதியும் பெறாத நிலையில் அணை கட்டும் பகுதிகளில் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியில், அணை கட்டுவதால், 12 ஆயிரத்து, 978 ஏக்கர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.


latest tamil news




இந்த செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து பதிலளிக்கும்படியும் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், மேகதாதுவில், கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதி வழங்காது. மேகதாது பிரச்னை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அணை ணை கட்னா சொட்டு தண்ணி வராதுன்னு சொல்றாங்க
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
27-மே-202109:16:32 IST Report Abuse
Enrum anbudan அறிக்கை விடுவதற்கு முன் செல்வி அவர்களிடம் கொஞ்சம் கேட்டுக்கோங்க துறை. அப்புறம் பெங்களூரு அம்மா கோவிச்சுக்க போறாங்க.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
27-மே-202108:49:28 IST Report Abuse
arudra1951 நீ யார் அணைகட்ட அனுமதிக்க நீ யாருப்பா ?அந்த அணைகட்ட மணல் தமிழ் நாட்டில் இருந்து போவது உண்மையா இல்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X