பொது செய்தி

இந்தியா

பேரழிவுக்கு வாய்ப்பு; பொது தேர்வை ரத்து செய்யக்கோரி பிளஸ்2 மாணவர்கள் கடிதம்

Updated : மே 26, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: 300க்கும் மேற்பட்ட பிளஸ்2 மாணவர்கள் நேரடியாக நடத்தப்படும் 'ஆப்லைன்' பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது

புதுடில்லி: 300க்கும் மேற்பட்ட பிளஸ்2 மாணவர்கள் நேரடியாக நடத்தப்படும் 'ஆப்லைன்' பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, பள்ளி பொதுத் தேர்வுகள், உயர் கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 'நோய்த் தொற்று குறைந்த பின் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும்' என, மாநிலங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.



latest tamil news




இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட பிளஸ்2 மாணவர்கள், 'ஆப்லைன் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாற்று மதிப்பீட்டு முறையைக் கையாள வேண்டும்' என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: எப்போதும் இல்லாத அளவுக்கு சுகாதார நெருக்கடி நிலவும் சூழலில், மாணவர்களை நேரில் வரச் செய்து பொதுத் தேர்வுகளை நடத்துவது பேரழிவை ஏற்படுத்தும் முடிவாக இருக்கும். மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் அல்லது மாற்று மதிப்பீடு உள்ளிட்ட பிற எந்த முறைகள் மூலமாக வேண்டுமானாலும் மதிப்பிடப்படத் தயாராக உள்ளோம்.உச்ச நீதிமன்றம் இதுகுறித்துத் தானாகவே வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கொரோனா காலகட்டத்தில் ஆப்லைன் முறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்., மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27-மே-202111:47:15 IST Report Abuse
Bala Murugan பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அழகாக நடத்தி முடிக்கலாம். எவ்வளவு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன ? அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களையும் மாணவிகளையும் மூன்று மீட்டர் இடைவெளியில் உட்கார வைத்து முகக்கவசம் அணியச்சொல்லி ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஆசிரியைகளையும் கவனிக்கச் சொல்லி பத்து நாட்களில் முடித்து விடலாம். இது போக சோப்பு மற்றும் சனிடைஸிர் வைத்து விட வேண்டும். எட்டு முப்பத்துக்கெல்லாம் அனைவருக்கும் சாநிதிஸிர் போட்டுவிட்டு ஒன்பது முப்பதுக்கு கேள்வித்தாள் மற்றும் பதில் பேப்பர் கொடுத்துவிட்டு ஒரு மணிக்கு வாங்குவதாக வைக்கலாம். அலுவலக ஊழியர்களை வைத்து இடையில் தண்ணீர் கொடுக்க வேண்டும். முடிந்தால் மாணவ மாணவிகளே தண்ணீர் கொண்டு வரலாம்.
Rate this:
Cancel
yezhai thamizhan - Rio,பிரேசில்
27-மே-202111:03:29 IST Report Abuse
yezhai thamizhan இதுலயும் இலவசமா ? இது மாதிரி பரீட்சை எழுதாம எத்தனை பேரு எதிர்காலத்துல டாக்டர் ஆகி நம்ம உடம்புல, நம்ம குழந்தைங்க உடம்புல கத்திய வெச்சு கஷ்டமான அறுவை சிகிச்சை செய்ய போறானுகளோ ? இப்ப மட்டும் என்ன வாழுதாம்ன்னு கேட்பீங்க- அதுவும் சரிதான். :-)
Rate this:
Cancel
sri - trichy,இந்தியா
27-மே-202110:37:33 IST Report Abuse
sri பரிட்சை எழுத விருப்பப்பட்டவர்கள் எழுதலாம் எழுத விருப்பப்படாதவர்கள் கபூல்ச்சாரி பாஸ் செர்டிபிகாடே கொடுக்கப்படும் . மார்க் மினிமம் பாஸ் மார்க் கொடுக்கப்படும் . என்ன சந்தோஷமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X