கொரோனாவை எதிர்கொள்வதில் பயங்கரவாதத்தை மறந்துவிடக் கூடாது

Updated : மே 28, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி :''கொரோனா தொற்றை எதிர்கொள்வதால், பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாம் மறந்துவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். புத்த பூர்ணிமா தினம், உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா பெருந்தொற்று, அனைத்து நாடுகளையும்
கொரோனா தொற்று, எதிர்கொள்ள,பயங்கரவாதம்,மறந்து கூடாது'

புதுடில்லி :''கொரோனா தொற்றை எதிர்கொள்வதால், பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாம் மறந்துவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புத்த பூர்ணிமா தினம், உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்று, அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. எனினும், இந்த தொற்று, நமக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியுள்ளது; நம் போராட்டத்திற்கான வழிகளை பலப்படுத்தி உள்ளது.


பெருந்தன்மைகொரோனாவை ஒழிக்கவும், மக்களை காக்கவும், தடுப்பூசி மிகவும் முக்கியமானது. தொற்று பரவல் ஏற்பட்டு, ஒரு ஆண்டுக்குள் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு, நம் மன உறுதி தான் காரணம். கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க, அயராது பாடுபட்ட விஞ்ஞானி களுக்கு, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.தொற்று பரவல் காலத்தில், தங்கள் உயிரை பணயம் வைத்து, மற்றவர்களுக்காக தன்னலமின்றி உழைக்கும், நம் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகளுக்கு, மீண்டும் ஒரு முறை வணக்கம் செலுத்துகிறேன்.

கொரோனாவால் தங்களின் உறவினர்களை இழந்தவர்களுக்கு, என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தொற்று போல் ஒரு நெருக்கடியை, நம்மில் யாரும், இதுவரை பார்த்திருக்க முடியாது. இனியும் பார்க்கப் போவதில்லை. கொரோனா தொற்றுக்கு பின், நம் உலகம் முன்பு போல் இருக்காது. வருங்காலங்களில் நம் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை, கொரோனாவுக்கு முன்னர், கொரோனாவுக்கு பின்னர் என, வகுத்து கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு, பல தனிநபர்களும், அமைப்புகளும், மக்களின் துயரத்தை குறைக்க, தாமாக முன்வந்து, தங்களால் ஆன உதவிகளை செய்ததை பார்த்தோம்.அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள புத்த அமைப்புகள் மற்றும் புத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி, தங்கள் பெருந்தன்மையை காட்டினர்.

கொரோனாவுக்கு எதிராக நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போது, மனிதர்கள் சந்திக்கும், பயங்கரவாதம், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் மீதான பார்வையை, நாம் இழந்துவிட கூடாது; மறந்துவிடவும் கூடாது.


மனிதநேயம்பருவ நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது; பனிக்கட்டிகள் உருகுகின்றன. ஆறுகள் மற்றும் காடுகள் ஆபத்தில் உள்ளன. நம் பூமி, காயத்துடன் இருப்பதை அனுமதிக்க முடியாது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும், பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
புத்தரின் வாழ்க்கை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வது பற்றியது. ஆனால் உலகில், வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை பரப்புவதை நோக்கமாக கொண்ட, பல தீய சக்திகள் இன்னும் உள்ளன.அந்த சக்திகளுக்கு, ஜனநாயக கொள்கைகள் மீது நம்பிக்கை இல்லை. மனிதநேயத்தை நம்புபவர்கள், பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
27-மே-202123:34:48 IST Report Abuse
Believe in one and only God மோடிக்கு எதிரான கருத்துக்களை போடுவதில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தினமலர் அதிகள் வெளிவிடும். எனது நல்ல கருத்துக்கள் மோடிக்கு எதிராக இருந்தால் எதுவும் வெளிவருவத்தில்லை.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
27-மே-202115:11:58 IST Report Abuse
Arasu தீவிரவாதமா.... அப்பா சாமீ தாங்க முடியலை தலைவா யாராவது பெட்ரோல் என்ன விலைன் சொல்லுங்க இவரிடம் ...
Rate this:
NARAYANA PRABHU KUMAR - madurai,இந்தியா
27-மே-202121:32:19 IST Report Abuse
NARAYANA PRABHU KUMARyour only problem is petrol not covid...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
27-மே-202113:54:48 IST Report Abuse
Visu Iyer இப்போ தேர்தல் எதாச்சும் வருதா....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X