ரூ.1,000 கோடி தரணும் : ராம்தேவுக்கு ஐ.எம்.ஏ., 'நோட்டீஸ்'

Updated : மே 28, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
டேராடூன்:'அலோபதி மருத்துவ துறை தொடர்பான அவதுாறு கருத்துகளுக்கு மன்னிப்பு கோராவிடில், 1,000 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, யோகா குரு பாபா ராம்தேவுக்கு, இந்திய மருத்துவ சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.கொரோனா சிகிச்சைக்காக, மருத்துவமனைகளில் வழங்கப்படும், 'அலோபதி' மருந்துகள் பற்றியும், அவற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளதாகவும்
மன்னிப்பு,ரூ.1,000 கோடி, ராம்தேவு,ஐ.எம்.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியது

டேராடூன்:'அலோபதி மருத்துவ துறை தொடர்பான அவதுாறு கருத்துகளுக்கு மன்னிப்பு கோராவிடில், 1,000 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, யோகா குரு பாபா ராம்தேவுக்கு, இந்திய மருத்துவ சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக, மருத்துவமனைகளில் வழங்கப்படும், 'அலோபதி' மருந்துகள் பற்றியும், அவற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளதாகவும் சமூக வலைதளங்களில், யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்ட, 'வீடியோ' பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின், சத்தீஸ்கர் மாநில செயலர் அஜய் கண்ணா சார்பில், பாபா ராம்தேவுக்கு அனுப்பியுள்ள, 'நோட்டீஸ்' விபரம் வருமாறு:பாபா ராம்தேவ் வெளியிட்ட கருத்துகள், அலோபதி மருத்துவ துறைக்கும், அதில் பணியாற்றும் எங்கள் சங்கத்தின், 2,000 உறுப்பினர்களின் நற்பெயருக்கும், களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

1000 கோடி தர ராம்தேவுக்கு டாக்டர் நோட்டீஸ்! அலோபதி மருத்துவத்தால்தான் கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர். அந்த மருத்துவமுறை முட்டாள்தனமானது என்று யோகா குரு ராம்தேவ் கூறியது சர்ச்சையானது. அந்த கருத்துக்கு 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில தலைவர் அஜய் கன்னா, ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.

இது, இந்திய தண்டனை சட்டம், 499வது பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கை ஆகும். ராம்தேவ் வெளியிட்ட கருத்துகளுக்கு, 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும்.

இல்லாவிடில் அவரிடம் இருந்து, எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் வீதம், 1,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அவர் வெளியிட்ட வீடியோவில் கூறிய கருத்துகள் தவறானவை என, ஏற்றுக்கொள்வதாக, புதிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.


மேலும், கொரோனாவுக்கு சிறந்த மருந்து என, அவரது நிறுவனம் உருவாக்கிய 'கொரோனில் கிட்' தொடர்பான விளம்பரங்களை, அனைத்து தளங்களில் இருந்தும் திரும்ப பெற வேண்டும்.இல்லாவிடில், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்திய மருத்துவ சங்கம், ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
27-மே-202122:24:42 IST Report Abuse
தத்வமசி இந்த மருத்துவ கழகம் டுபகூறு. இவனுங்க எத ஒழுங்காக சொன்னாங்க. இந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது என கட்டுக்கதையை மறுக்காமல் இருந்த இவனுங்களது கழகத்தை கலைக்க வேண்டும். இவனுங்க சீன அடிமை.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
27-மே-202120:32:41 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN "இந்திய மருத்துவ சங்கம், ராம்தேவ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது." அவங்க நோக்கத்துல பழுது
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
27-மே-202119:45:34 IST Report Abuse
s t rajan இந்திய மெடிகல் அசோஸியேஷன் மாதிரித் தெரியவில்லையே ? ஏதோ க்ருஸ்துவ மிஷனரிகளின் கூட்டுறவு சங்கமோ என்று தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X