அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு அதிகாரிகளை பந்தாடாதீர்: சீமான்

Updated : மே 28, 2021 | Added : மே 26, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : 'நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளை பந்தாடும் போக்கை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சுகாதாரத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நிர்வாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அரசு
அரசு அதிகாரிகள், பந்தாடாதீர்: சீமான்

சென்னை : 'நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளை பந்தாடும் போக்கை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சுகாதாரத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நிர்வாக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அரசு மருத்துவமனை டீன்கள் உட்பட, அரசின் முக்கிய நிர்வாகங்களில், தற்போது செயல்பட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் வேறு துறைகளுக்கும், வேறு பணிகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதனால், தொற்று தடுப்பு முன்களப் பணிகளில் ஈடுபட்ட, அவர்களின் அனுபவம் வாய்ந்த செயல்பாடுகள், மக்களுக்கு பயன்படாமல் வீணடிக்கப்படுகின்றன.
புதிய அதிகாரிகள், புதிய பணியிடங்களுக்கு சென்று பொறுப்பேற்கவும், கோப்புகளையும், களச்சூழலையும் ஆராய்ந்து, நிலைமை உணர்ந்து செயல்பட சில நாட்கள் ஆகும். இதனால், தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் பின்னடைவு ஏற்படும்.
எனவே, தொற்று காலம் முடியும் வரை, அதிகாரிகளின் முன் அனுபவம் சார்ந்த பணி அலுவலர்களைச் சரியாக பயன்படுத்தி, மக்கள் உயிர்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மே-202122:56:19 IST Report Abuse
ஆப்பு மே 19 ந்தேதி துறையை மாற்றி நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் ரெண்டு நாளில் திரும்ப மாற்றப் பட்டார். கேட்டா, நாலு வருஷம் முன்னாடி முறைகேடு செஞ்சவராம். அவரு எந்தத் துறைக்கு மாற்றப்பட்டாலும் ஊழல்தான் செய்வாரு. அவரை வீட்டுக்கு அனுப்பாம இறையன்பு காமெடி செஞ்சுக்கிட்டிருக்காரு.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
27-மே-202122:53:48 IST Report Abuse
S. Narayanan இந்த விஷயத்தில் சீமானை பாராட்டவேண்டும். அனுபவம் இல்லாத அதிகாரிகளால் தொற்றை அதிகமாகவே முடியும் என்பது கூட இந்த ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. 10 சும்மா இருந்து விட்டு இப்போது எப்படி அவர்களால் திறமையாக வேலை செய்ய முடியும். விடியுமா.
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
28-மே-202110:45:32 IST Report Abuse
gayathriமற்றவர்களுக்கு எதுவுமே தெரியாத. இந்த சீமானுக்கு மட்டுமே எல்லாம் தெரியுமா? முட்டாள்கள் தான் தான் தான் அறிவாளி என்று நினைப்பார்கள். அவர்களை விட இந்த சீமான் கீழ்...
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
28-மே-202110:46:00 IST Report Abuse
gayathriஅருமை. உங்களின் கருது...
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
27-மே-202115:05:51 IST Report Abuse
Arasu இவன் அதிமுகவின் பி டீம் ..பக்கா பிராட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X